Take a fresh look at your lifestyle.

Andhagan Movie Review

33

S T A R. M O V i E S
பிரீத்தி தியாகராஜன் பெருமையுடன்
வழங்கும்
தயாரிப்பாளர்
சாந்தி தியாகராஜன்
தயாரிப்பில்…
கதை
ஶ்ரீ ராம் ராகவன்
படைப்பில்..
நடிகர்
தியாகராஜன்
இயக்கத்தில்…
இசையமைப்பாளர்
சந்தோஷ் நாரயணன்
இசையில்…
ரவி யாதவ்
ஒளிப்பதிவில்…
நடனம்
பிரபு தேவா
நடன பயிற்சியில்…
டாப் ஸ்டார் – பிரஷாந்த்
சிம்ரன்,
பிரியா ஆனந்த்,
கார்த்திக்,
சமுத்திரகனி,
K.S.ரவிகுமார்,
ஊர்வசி,
யோகி பாபு,
மனோ பாலா,
வனிதா விஜயகுமார்,
லீலா சாம்சன்,
செம்மலர்,
பூவையார்
மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் அந்தகன்

கதை

பிரஷாந்த் ஒரு பியோனோ ஆர்டிஸ்ட். கண் குறைபாடு உள்ளவர். ஒரு நாள் ப்ரியா ஆனந்த் நட்பு பிரசாந்த்க்கு கிடைக்க அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கிறது.
ப்ரியா ஆனந்த் பாரிலேயே ஒரு வேலை பிரஷாந்த்துக்கு கிடைக்க, இதில் வரும் வருமானம் வைத்து லண்டன் போக முயற்சி செய்து வருகிறார். இந்த நேரத்தில் நடிகர் கார்த்திக் அறிமுகம் பிரஷாந்துக்கு கிடைக்கிறது.

கார்த்திக் அவருடைய மனைவியை(சிம்ரன்) திருமண நாள் அன்று சர்ப்ரைஸ் செய்ய, பிராசந்தை வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு வந்த பிராசாந்திற்கு ஒரு கடும் அதிர்ச்சி.
கார்த்திக் அங்கு இறந்து கிடக்கிறார், சமுத்திரக்கனி மற்றும் சிம்ரனும் இணைந்து கொலையை செய்ய, இதை பிரசாந்த் பார்க்கிறார், பிரசாந்த்க்கு கண் தெரியாதே என்பதால் அவரை சமாளித்து அனுப்புகிறார் சிம்ரன். பிரசாந்த் கண் தெரியாதது போல் நடித்து வருகிறார் என்ற உண்மை சிம்ரனுக்கு தெரிய பிரசாந்துக்கு உண்மையிலேயே கண்தெரியாதபடி செய்கிறார்., இதன் பிறகு நடக்கும் பதட்டமும், சுவாரஸ்யமும் தான் படத்தின் சுவாராஸ்யமான படத்தின் மீதிக்கதை.

பிரசாந்த் கண் தெரிந்தும் தெரியாதவராகவும் பிறகு உண்மையிலேயே கண்போய் கண் தெரியாதவராகவும் என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். பாடலில் நடனம் சிறப்பாக ஆடியுள்ளார். பிரியா ஆனந்த் கதாநாயகியாக சிறப்பாக நடித்துள்ளார். சிம்ரன் கதாபாத்திரம் அருமை. அதை சிறப்பாக செய்துள்ளார். போலிஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி வில்லனாக நன்றாக நடித்துள்ளார். ஊர்வசி யோகிபாபு வரும் சீன்கள் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலை. சமுத்திரக்கனி மனைவியாக வனிதா விஜயகுமார் நடிப்பு ரசிக்கவைக்கிறது. கே எஸ் ரவிக்குமார் கதாபாத்திரம் அருமை. அதேஷ்பாலா நடிப்பு அருமை.
சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு அருமை. ரவியாதவ் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

நடிகர் இயக்குநர் தியாகராஜன் ஹிந்தியில் வெற்றிபெற்ற படத்தினை வாங்கி அதை தமிழ் ரசிகர்கள் ரசிக்கும்படி Remade செய்து எல்லோரும் ரசிக்கும்படி வெற்றி படமாக கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள்.