மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் சி, தான்யா ஹோப், சாந்தினி, மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் வல்லான்.
கதை
இளம் தொழிலதிபர் கமல் காமராஜ் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை துப்பு கிடைக்காமல் தினறுகிறது. இதனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி-யிடம் உயர் அதிகாரி வழக்கை ஒப்படைக்கிறார். பணியில் இல்லை என்றாலும், தொழிலதிபர் கொலை வழக்கின் பின்னணியில், தனது தனிப்பட்ட பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் என்ற நோக்கத்தில் விசாரணை மேற்கொள்ளும் சுந்தர்.சி, பல மர்ம முடிச்சுகள் அவித்தாலும், அடுத்தடுத்த கொலைகளால் மேலும் பல மர்மங்கள் அவரை சூழ்கிறது. ஜோயலின்(கமல்காமராஜ்) நிறுவனத்தில் தவறு நடக்கிறது என்பதை கண்டுபிடித்த பிறகு திவாகரின் வருங்கால மனைவியான ஆத்யா(தான்யா ஹோப்) காணாமல் போகிறார். ஆத்யா காணாமல் போனதற்கும் ஜோயலின் கொலைக்கும் தொடர்பு இருக்கிறது என சுந்தர் சி தெரிந்து கொலை குறித்து ஹமாடல் அழகியான ஹீபா பட்டேலிடம் விசாரிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை
சுந்தர் சி போலிஸ் ஆபிசராக நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக தான்யா ஹோப் சிறப்பாக நடித்துள்ளார். .ஹீபா பட்டேல் தனக்கு கொடுத்த வேலை திறம்பட செய்திருக்கிறார்.இளம் தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்மணி பெருமாளின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம். சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
இயக்குநர் மணி சேயோன் எடுத்துக் கொண்ட கிரைம் திரில்லர் கதையை இன்னும் கொஞ்சம் சுவாராஸ்யமாகசொல்லியிருக்கலாம். பாராட்டுக்கள்