Take a fresh look at your lifestyle.

Mr House Keeping movie Review

3

ஸ்ரீதேனான்டாள்முரளி தயாரிப்பில் அருண் ரவிச்சந்திரன் இயககத்தில் ஹரிபாஸ்கர், லாஸ்லியா, ரயான்,இளவரசுஷாரா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்
கதை
காலேஜில் லாஸ்லியாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார் ஹரிபாஸ்கர்.
ஆனால் லாஸ்லியா அவரது காதலை ஏற்காததால், காலேஜ் முடித்து 4 ஆண்டுகளில் வேறொரு பெண்ணை காதலித்து வாழ்க்கையில் செட்டில் ஆவேன் என ஹரிபாஸ்கர் சவால் விடுகிறார்.
அதன் பின்னர் 4 ஆண்டுகள் கழித்து ஹரிபாஸ்கர் ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கு திருமணமாகிறது. அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயற்சிக்கிறார் ஹரிபாஸ்கர். அவரை நண்பர் ஷாரா வெளியே அழைத்து செல்கிறார். அற்ப சந்தோஷத்திற்காக வீடியோ சேட்டிங் செய்யும்போது அப்பா துணி மாற்றுவது பிளாக்மெயில் செய்பவர்களிடம் கிடைக்க  பின் அப்பாவின் தவறான வீடியோவை அழிக்க படம் 5000 வேண்டும் என்று அவன் மிரட்ட அந்த பணத்திற்காக  ஒரு கட்டத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு ஹரி செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அவர் செல்லும் வீடு லாஸ்லியா உடையது என தெரிந்ததும்  அதிர்ச்சியடைகிறார். தன் சூழ்நிலை கருதி ஹரிபாஸ்கர் லாஸ்லியா வீட்டில் வேலை செய்து லாஸ்லியாவை காதலிக்க வைக்க முயற்சிக்கிறார் ஹரி. ஹரியை புரிந்துகொண்ட லாஸ்லியா அவரை பெஸ்டி ஆக பார்க்க ஆரம்பிக்கிறார்.
ஆனால் ஹரி, தன்னை லாஸ்லியா காதலிப்பதாக தவறாக நினைக்க பின்னர் என்ன ஆனது? இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே  படத்தின் மீதிக்கதை கதை.
யூடியுபில் ஜம்ப் கட்ஸ் சேனல் மூலம் பிரபலமான ஹரிபாஸ்கர் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். காமெடி நடிப்பில் ஸ்கோர் செய்யும் அவர், எமோஷனல் காட்சிகளிலும் நன்றாக  நடித்துள்ளார். லாஸ்லியா இசை என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.இளவரசுவும், உமா ராமச்சந்திரனும் குறை சொல்ல முடியாத அளவிற்கு யதார்த்த நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள்.ஷாரா பல இடங்களில் ஒன்லைன் பஞ்ச் மூலம் சிரிக்க வைக்கிறார்.பிக்பாஸ் ரயான் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்ஓஷோ வெங்கட்டின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறதுஒளிப்திவும் படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் பக்காவான காமெடி கதையை குடும்ப சென்டிமென்ட் காட்சிகளை ஆங்காங்கே சரியாக தூவி அனைவரும் பார்க்கும்படியான ஒரு படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.  சொல்ல வந்த கதையை நன்றாக திரைக்கதையமைத்து ரசிக்கும்படி சொல்லியிருக்கலாம். படத்தின் நீலத்தை குறைத்திருக்கலாம். முதல் முயற்சிக்கு இயக்குநர் அருண் ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துக்கள்.