பத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய கலைஞர்கள் அஜித் குமார் மற்றும் ஷோபனாவிற்கு வாழ்த்துகள்.
பத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய கலைஞர்கள் அஜித் குமார் மற்றும் ஷோபனாவிற்கு வாழ்த்துகள்.
‘அமராவதி’ திரைப்படம் மூலம் 1993-ல் தனது திரைப்பயணத்தை தொடங்கி, 61 திரைப்படங்கள் மூலம், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, பல சிறப்பான திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்து, லட்சக்கணக்கான ரசிகர்களின் அன்புடன், முன்னணி நடிகராகவும், Box Office வசூலில் பல சாதனைகளையும் புரிந்த திரு. அஜித் குமார் அவர்களுக்கு இந்திய அரசின் பெருமைக்குரிய “பத்ம பூஷன்” விருது கிடைத்துள்ளது தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது. சினிமாவில் மட்டுமல்லாது கார் ரேஸிங் மூலமும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் திரு. அஜித் குமார் அவர்களின் இந்த பயணம் மேலும் தொடர்ந்து, அவர் பல வெற்றிகளை குவிக்கவும், விருதுகளைப் பெறவும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
நடனம் மற்றும் நடிப்பு மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, பத்மஸ்ரீ விருது, நடிப்புக்காக இரு முறை தேசிய விருதுகள் மற்றும் பல விருதுகளை பெற்ற செல்வி ஷோபனா சந்திரகுமார் அவர்களுக்கு “பத்ம பூஷன்” விருது கிடைத்துள்ளது, கலைத்துறைக்கு அவரின் அர்பணிப்புக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறோம். 40 வருடங்களுக்கு மேலாக தன்னை சினிமா மற்றும் நடன துறைக்கு அர்ப்பணித்து சிறப்பான திரைப்படங்களில் நடித்து வரும் செல்வி ஷோபனா அவர்களின் பங்களிப்பு மேலும் தொடரவும், பல வெற்றிகளையும், விருதுகளையும் அவர் பெற, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்துகிறது.
இந்த மதிப்புமிக்க கௌரவத்தை தந்து, தமிழ் சினிமாவின் கலைஞர்களை பெருமைப்படுத்திய மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கும் நம் சங்கத்தின் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்