Take a fresh look at your lifestyle.

Kuzhanthaigal Munnetra Kazhagam Movie Review

6

மீனாக்‌ஷி அம்மன் மூவிஸ்  அருண்குமர் சம்மந்தம் தயாரிப்பில் என்.சங்கர் தயாள் இயக்கத்தில் யோகி பாபு, செந்தில், சுப்பு பஞ்சு, இளைய வர்மன், அத்வைத் ஜெய் மஸ்தான், ஹரிகா, வைகா ரோஸ், மயில்சாமி, சித்ரா லட்சுமணன், அஸ்மிதா சிங் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருககும் படம் குழந்தைகள் முன்னேற்ற கழகம் கதை

அரசியல்வாதியான யோகி பாபுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் போது, வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்கிறார். இதனால் அவருக்கும் ஒரு குழந்தை  பிறக்கிறது. அதனால் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள். அவரது மகன் தனது தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசையோடு வளர்கிறார். மூத்த மனைவியின் மகனும் அரசியலில் தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படிக்க, பள்ளிக் காலம் முதலே, தலைவர், விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான அம்சங்களுடன் வளர்கிறார்கள். இவர்கள் நினைத்தது போல் இவர்களது எதிர்காலம் அமைந்ததா?, இல்லையா? என்பதை தமிழக அரசியலையும், குடும்ப அரசியலையும் மையமாக வைத்துக் கொண்டு நகைச்சுவையாக சொல்லியிருப்பதே  ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’. படத்தின் கதை

யோகி பாபு கதையின் நாயகனாக நக்கல் நையாண்டி பேசி சிறப்பாக நடித்துள்ளார். நடிகர் செந்தில் அரசியலில் தலைவராக நன்றாக நடித்துள்ளார்.கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் சிறப்பாக போட்டிபோட்டு நடித்துள்ளார்கள்.      சிறுமி ஹரிகா பெடடாவின் , நடிப்பும் அருமைசுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களது கதாபாத்திரம் உஊர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள்.சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவு அருமை.

தமிழக போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் மூலம் நகைச்சுவையாக சொல்லியிருப்பதோடு சிறுவர்களிடம் வேலை வாங்கிய விதம் மற்றும் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் மூலம் அவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி, அதில் நடக்கும் சதி, ஏமாற்றம், அதை தொடர்ந்து இரண்டு சிறுவர்களின் அரசியல் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள். பாராட்டுக்கள்.