இயக்குனர் பா.ரஞ்சித் வழங்கும் நீலம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் , மாறன், ஜமா பாரி இளவழகன் மற்றும் பலர் நடித்துவெளியாகியிருக்கும் படம் பாட்டில் ராதா.
கதை
டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருபவர் ராதாமணி என்கிற பாட்டல் ராதா(குரு சோமசுந்தரம்). டைல்ஸ் ஒட்டுவதில் கில்லாடியான அவர் மதுவுக்கு அடிமை. ராதாவை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க கட்டிட வேலைக்கு வா என்று ஜான் விஜய் கூப்பிடட்டு சென்று தன் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துக் கொள்கிறார் மனைவி(சஞ்சனா நடராஜன்) கேட்டுக் கொண்டதற்காக. ஜான் விஜய் நடத்தும் அந்த மறுவாழ்வு மையம் ஒரு சிறை போன்று இருக்கிறது பாட்டல் ராதாவுக்கு அங்கு இருக்க பிடிக்காமல் ராதா தப்பி வெளி வருகிறார். இனியும் இவரை திருத்த முடியாது என குடும்பம் பிரிகிறது. இழந்த குடும்பத்துடன் மீண்டும் சேர பாட்டல் ராதா குடியை கைவிட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
குரு சோமசுந்தர்ம் குடிக்கு அடிமையானவராக சிறப்பாக நடித்துள்ளார். குடிகாரனின் மனைவியாக சஞ்சனா நடராஜன் நன்றாக நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் அருமை. ஜான் விஜய் அசத்தலாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.மாறனின் காமெடி கை கொடுத்திருக்கிறது. படத்தின் நீளம் தான் பொறுமையை சோதிக்கிறது.ஷான் ரோல்டனின் இசையில்பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
இயக்குநர் தினகரன் சிவலிங்கம் குடிகாரர்களின் கதையை பாடம் நடத்தி ரசிகர்களை கஷ்டப்படுத்தாமல் ஜாலியாக கதை போகிற போக்கில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கருத்துக்களை சொல்லி குடியால் குடும்பம் எப்படி எல்லாம் பாதிக்கப்படும். மனைவி யாரிடம் எல்லாம் அசிங்கப்பட வேண்டியிருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் எப்படி சீரழியும் என அனைத்து விஷயங்களையும் ஆழகாக எடுத்துக்காட்டியுள்ளார் பாராட்டுக்கள்.