அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத்குமார் தயாரிப்பில், மணிகண்டன் நாயகனாக நடித்திருக்கும் படம் குடும்பஸ்தன். சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், “ஜெய ஜெய ஜெய ஹே” புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளியாகியிருக்கும் படம்.. வைசாக் இசையமைத்துள்ளார்.
கதை
கதாநாயகன் (மணிகண்டன்) அவசர அவசரமாக கதாநாயகியை (சான்வே மேகனா) சாதி மறுப்புத் திருமணம் செய்கின்றார். இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தாலும், கடைசியாக கதாநாயகன் குடும்பத்துடன் இணைந்து வாழ்கின்றார்கள். ஹீரோவுக்கு ஒரு அக்கா, அவரையும் வசதியான இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். பெற்றோர்களுக்கும் சரியான வருமானம் இல்லை. எனவே, ஹீரோவின் வருமானத்தை நம்பிதான், மொத்த குடும்பமும் உள்ளது. அக்கா வீட்டுக்காரர் எப்போதுமே ஹீரோ குடும்பத்தை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்.இந்த நெருக்கடியான சூழலில் கதாநாயகி, தான் யுபிஎஸ்சி தேர்வு எழுதப் போகின்றேன், லேப்டாப் வேண்டும் என்கிறார். அம்மா ஆன்மீக சுற்றூலா போக பணம் வேண்டும் என்கின்றார். அப்பா வீட்டை பழுது பார்க்கவேண்டும் என்கின்றார். எல்லாவற்றிக்கும் சரி எனச் சொல்கின்றார், ஹீரோ. இந்த நெருக்கடியான சூழலில் ஹீரோவுக்கு வேலை போகின்றது. தனக்கு வேலை போன விஷயம் அக்காவின் கணவருக்கு தெரியக்கூடாது என நினைக்கின்றார். இது இல்லாமல், தனது குடும்பம் நடத்த கடன் வாங்குகின்றார். கடன் நாளுக்கு நாள் அதிகமாவதால் கடன் வாங்கியதால் என்னவெல்லாம் நடக்கின்றது, மணிகண்டன் நேர்மையாக வாழ்வதால் அவருக்கு என்னென்ன சோதனைகள் ஏற்படுகிறது குடும்பத்தின் ஜெயித்தாரா? என்பதே படத்தின் கதை
மணிகண்டன் குடும்பஸ்தனாக நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். கதாநாயகி சான்வே சிறப்பாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம் சிறப்பாக நடித்துள்ளார். குருசோமசுந்தரம்மனைவியாக நடித்தவரும் நன்றாக நடித்துள்ளார். சுந்தர்ராஜன், கனகம்மா, பிரசன்னா பாலசந்திரன், ஜென்சன், பாலாஜி சக்திவேல் என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கேரக்டர் உணர்ந்து சிறபுபாக நடித்துள்ளனர். வைசாக்கின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்வைக்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம்.
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி குடும்பஸ்தன் திரைப்படத்தை எல்லோரும் ரசிக்கும்படி வெற்றி படமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.