Take a fresh look at your lifestyle.

Poorveegam Movie Review

3

பிரைன் டச் ஃபிலிம் பேக்டரி -டாக்டர்.ஆர்.முருகானந்தம் தயாரிப்பில்ஜி.கிருஷ்ணன், இயக்கத்தில் கதிர், மியா ஸ்ரீ, போஸ் வெங்கட், இளவரசு, சங்கிலி முருகன், ஸ்ரீரஞ்சனி, சூசன், ஒய்எஸ்டி சேகர் மற்றும் பலர்.நடித்து வெளியாகியிருக்கும் படம் பூர்வீகம்
கதை     
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் போஸ் வெங்கட் தன்னுடைய மகன் கதிரை விவசாயத்தில் ஈடுபடுத்தாமல் நல்ல படிக்க வைத்து, அரசு அதிகாரியக்க ஆசைப்படுகிறார். தனது கிராமத்து சொந்தங்களை‌ தள்ளி விட்டு நகர வாழ்க்கையில் தனது
மகனை செயல்‌ படுத்த ஆசைபடுகிறார். அவரது ஆசைப்படி, தனது மகன் நன்றாக படித்து அரசு அதிகாரியாக வந்து, வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். தனது ஆசைப்படி தன் மகன் வாழ்க்கையில் சிறப்பாக உயர்ந்தாலும், ஒரு தந்தையாகிய போஸ் வெங்கட்டால் மகனின் சில மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகிறது, அவரிடம் உரிமையாக சொந்தங்களோடு உறவாட முடியாத சூழலும் உருவாகிறது. நகர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது மகனையே இழக்கும்
தறுவாயில் நிலைக்கு தள்ளப்பட்டு போஸ் வெங்கட்டின் நிலைமை மாறியதா?, பூர்வீகத்தை விட்டுவிட்டு படிப்புக்காகவும், பணிக்காகவும் நகர வாழ்க்கையில் ஈடுபட்டு, தனது பெற்றோர்களை மறந்துபோகும் மனநிலைமைக்கு ஆளாகிறார். கதிர், மனம் மாறிவிட்டாரா? இல்லையா? என்பதே ‘பூர்வீகம்’. படத்தின் கதை   
கதிரின் கதாபாத்திரம் இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது: கிராமத்து இளைஞனாகவும், நகரத்தில் வசிக்கும் குடும்ப மனிதனாகவும். அவர் தனது கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை தனது நடிப்பின் மூலம் திறம்பட வெளிப்படுத்துகிறார். கதிரின் மனைவியாக வரும் மியா ஸ்ரீ, தனது கதாபாத்திரத்திற்கு ஒரு கிராமிய அழகைக் கொண்டு வந்து அந்த பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கிராமத்தை விட்டு வெளியேறும் மகனின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தையாக போஸ் வெங்கட் மனதை பிசையும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளவரசு, சங்கிலி முருகன், ஸ்ரீரஞ்சனி, சூசன், ஒய்எஸ்டி சேகர் என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர் சானக்யாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.  விஜய் மோகன் ஒளிப்பதிவு கிராமத்தின் அழகையும், மக்களையும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
 இயக்குனர் ஜி.கிருஷ்ணன். எல்லோரும் ரசிக்கும் படியான படத்தை கொடுத்துள்ளார்பாராட்டுக்கள்
மொத்தத்தில், “பூர்வீகம்”    உங்கள் சொந்த ஊரின் அழகையும், உறவுகளின் முக்கியத்துவத்தையும் பாராட்ட வைக்கும் ஒரு மனதைக் கவரும் திரைப்படம்