Alangu Movie Review

இயக்குனர் எஸ் பி சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சவுந்தர்ராஜா, ஸ்ரீரேகா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொற்றவை, தீக்‌ஷா, மஞ்சுநாதன் மற்றும் பலர் நடித்து டிசம்பர் 27 ல் வெளியாகும் படம் அலங்கு. DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் பிரொடக்‌ஷன்ஸ் சார்பில் சபரிஷ், சங்கமித்ரா செளமியா அன்புமணி தயாரித்திருக்கின்றனர்
அஜீஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
கதை கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் கதை நகர்கிறது. மலைப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார் ஸ்ரீரேகா. இவருக்கு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். காட்டு யானை தாக்கி கணவன் இறந்து விட, தனியொரு பெண்ணாக இரு பிள்ளைகளையும் வளர்க்கிறார் ஸ்ரீ ரேகா.
வட்டிக்கு கடன் வாங்கி தனது மகன் குணாநிதியை படிக்க வைக்கிறார் ஸ்ரீரேகா. சிறிய பிரச்சனை காரணமாக கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் ஆகிறார் குணாநிதி.
கடன் கொடுத்தவர்கள் ஸ்ரீரேகாவிடம் கேட்க, வேறு வழியின்றி கடனை அடைக்க, தனது நண்பர்களோடு ஆசையாக வளர்க்கும் நாயை அழைத்துக் கொண்டு கேரளாவிற்கு செல்கிறார் குணாநிதி. திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறந்த குழந்தை என்பதால், தன் பெண் குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் செம்பன் வினோத். இவரது, தோட்டத்திற்கு தான் வேலைக்குச் செல்கிறார் குணாநிதி.
வீட்டு விழாவில் தனது மகளை நாய் ஒன்று கடித்துவிட்டதைக் கண்ட செம்பன் வினோத், அந்த ஏரியாவில் இருக்கும் அனைத்து நாய்களை கொன்று விட தனது அடியாட்களிடம் உத்தரவிடுகிறார்.
பல நாய்களை கொன்று குவிக்கும் அவரது அடியாட்கள், குணாநிதியின் நாயையும் கொல்ல செல்கின்றனர். அப்போது நடக்கும் சண்டையில் செம்பன் வினோத்தின் வலதுகரமாக இருந்த சரத் அப்பாணியின் கையை துண்டாக வெட்டி விடுகிறார் குணாநிதி.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை. கதையின் நாயகனாக குணாநிதி சிறப்பாக நடித்துள்ளார். குணாநிதியின் தாயாக நடித்த ஸ்ரீரேகாவின் நடிப்பு மிரட்டல். காளி வெங்கட் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
குணாநிதியின் நண்பர்களாக வந்த இருவரும் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
தனது மகள் மீது வைத்திருக்கும் தந்தையாக செம்பன் வினோத் சிறப்பாக நடித்திருக்கிறார். சரத் அப்பாணி நடிப்பு அருமை.. சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொற்றவை, தீக்‌ஷா, மஞ்சுநாதன் என இதில் நடித்திருக்கிறார்கள் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அஜிஷின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு நாமும் பயணமாக வைத்தது பாண்டிக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். இயக்குனர் எஸ் பி சக்திவேல். Man Vs Dog கதையை முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியிலும் இருக்கும்படி செய்திருக்கலாம். .பாராட்டுக்கள்.
#alangumoviereview
Comments (0)
Add Comment