மழையில் நனைகிறேன் திரை விமர்சனம்

மழையில் நனைகிறேன் திரை விமர்சனம்
 
டி. சுரேஷ்குமார் இயக்கத்தில் அன்சன்பால், ரெபாஜான், மேத்யூ வர்கீஸ்,அனுபமா குமார், ஷங்கர்குரு ராஜா, சுஜாதா மற்றும் பலர் நடித்து டிசம்பர் 27ல் வெளியாகும் படம் மழையில் நனைகிறைன். கதை தொழிலதிபர் ஜோசப் செபாஸ்டியன் (மேத்யூ வர்கீஸ்) மற்றும் அவரது மனைவி ரெஜினா (அனுபமா குமார்) ஆகியோரின் ஒரே மகன் ஜீவா செபாஸ்டியன் (அன்சன் பால்). கண்டிப்பான அப்பா, அம்மாவின் அன்பால் சுகபோக வாழ்க்கை வாழும் ஜீவா, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நண்பர்களுடன் ஜாலியா இருக்கிறார். இந்த சூழ்நிலையில் பாரம்பரியத்துடன் வாழ்ந்து வரும் சேஷாதாரி (சங்கர் குருராஜா) மற்றும் சுஜாதாவின் மூத்த மகள் ஐஸ்வர்யா (ரெபா ஜான்) முதுகலை பட்டப்படிப்புக்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும்போது, ஜீவா தற்செயலாக ஐஸ்வர்யாவை கண்டதும் காதல் வருகிறது. தனது காதலை சொல்ல ஐஸ்வர்யாவின் பல நாட்களாக பின்தொடர்கிறார். இதை பார்த்த ஐஸ்வர்யா ஜீவாவை எச்சரிக்கிறார். ஒரு நாள், ஜீவா தனது காதலை ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார். ஐஸ்வர்யா தன் லட்சியத்தை சொல்லி ஜீவாவின் காதலை ஏற்க மறுக்கிறார். மனம் தளராத ஜீவா, இன்று நீ என்னைக் காதலிக்காமல் இருக்கலாம், ஆனால் ஒரு நாள் நீ விரும்புவாய் என்று நான் நம்புகிறேன். அதுவரை உனக்காக நான் காத்திருப்பேன். என்று கூறிவிட்டு ஐஸ்வர்யாவை பின் தொடராமல் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் நாட்கள் செல்ல செல்ல, ஜீவாவின் நல்ல குணங்களை தன் தங்கை மூலம் தெரிந்து ஐஸ்வர்யாவிற்குள் ஜீவாமீது காதல் மலர்கிறது. தன் காதலை ஜீவாவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். எப்படியாவது ஜீவாவிடம் தன் காதலை சொல்ல நினைக்கும் போது, ஜீவாவிடம் தன்னை ஒரு இடத்தில் விடும்படி கேட்கிறாள். ஜீவா ஐஸ்வர்யாவை தன் நண்பனின் பைக்கில் ஏற்றிச் செல்லும்போது இருவருக்கும் சாலை விபத்து ஏற்பட்டு ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்பிறகு இருவரும் உயிர் பிழைத்து ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்ன நடந்தது என்பதே படத்தின் மீதக்கதை. கதாநாயகன் அன்சன் பால் ஜீவா சபாஸ்டியன் கதாபாத்திரத்திலும், கதாநாயகி ரெபா ஜான் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பெற்றோர்களாக நடித்த மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், ஷங்கர் குரு ராஜா, சுஜாதா, ஜீவா சபாஸ்டியனின் நண்பன் சிவாவாக கிஷோர் ராஜ்குமார் மற்றும் வெற்றிவேல் ராஜா, கதாநாயகியின் தங்கை, தம்பி என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
விஷ்ணு பிரசாத்தின் இசையும் பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது. ஜே.கல்யாணின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
அழகான காதல் கதையை யாரும் எதிர்பார்க்காத க்ளைமேஸுடன்; சொல்ல நினைத்த இயக்குனர் டி.சுரேஷ் குமார் திரைக்கதையை கொஞ்சம் சுவராஸ்படுத்தியிருந்தால், மழையில் நனைகிறேன் சற்று தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாக இருந்திருக்கும். வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள்.
#maqzhaiyilnanailirenmoviereview
Comments (0)
Add Comment