சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உமாபதி இயக்கத்தில் தம்பி ராமைய்யா, தீபா சங்கர், சமுத்திரகனி, சுரேஷ் காமாட்சி, அருள்தாஸ், மூர்த்தி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ராஜாகிளி.
கதை
முருகப்பா சென்ராயர் ( தம்பிராமைய்யா) பல தொழில்களை செய்து கோடீஸ்வரனாக வாழ்ந்து வருகிறார். அவரது மனைவி முருகப்பாவை பெண் சவகாசம் இருக்கிறது என்று சந்தேகப்பட்டு வார்த்தையால்கொடுமைப்படுத்துகிறார்.கணவன் மனைவிக்குள் இல்லறமும் பல வருடங்களாக இல்லை. இருந்தாலும் மனைவிமேல் பாசம் வைத்து மனைவி சொல்வதை பொருட்படுத்தாமல் நேர்மையாக வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் ஜவுளிக்கடை தொடங்கிய பிறகு பெண் சகவாசத்திற்கு அடிமையாகிறார். பெண் சகவாசத்தால் முருகப்பா வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை
முருகப்பா சென்ராயராக தம்பி ராமைய்யா நடிப்பிலும் நடனத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தும் தம்பி ராமைய்யா மனைவியாக தீபா சங்கர் சிறப்பாக நடித்துள்ளார். போலிஸ் அதிகாரியாக அருள்தாஸ் நன்றாக நடித்துள்ளார். வழக்கறிஞராக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வரும் காட்சிகள் சுவராஸ்யம். சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். சமுத்திரகனி கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். மூர்த்தி, அம்பானி சங்கர், ரேஷ்மா பசுபுலேட்டி, சுவேதா, ஆடுகளம் நரேன் மியாஸ்ரீ சௌம்யா, கிரிஷ், பழகருப்பையா என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். Kedarnath Gopinath ன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். சாய் தினேஷின் பின்னணி இசை ரசிக்கவைக்கிறது. தம்பி ராமைய்யா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது.
இயக்குநர் உமாபதி ராமையா நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கொண்டு தம்பி ராமைய்யா எழுதிய கதையை எல்லோரும் ரசிக்கும்படி நல்ல படமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.பார்க்க வேண்டிய படம்