*மக்கள் கொண்டாடித்தீர்த்த படமான “ஆட்டோஃகிராப்”  21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது…*

*மக்கள் கொண்டாடித்தீர்த்த படமான “ஆட்டோஃகிராப்”  21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது…*
2004 பிப்ரவரி 19ல் வெளியான ஆட்டோஃகிராப் பெரும் வரவேற்பை பெற்று 150 நாட்களை கடந்து சுமார் 75 திரையரங்குகளில் ஓடியது..  எந்த திரையரங்கில் பார்த்தாலும் ஆட்டோஃகிராப் திரைப்படம் மட்டுமே ஓடிய காலத்தை முதல்முதலாக உருவாக்கியது.. இதனால இப்படம் மக்களால் மறக்கமுடியாத படமாக மாறியது..
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் அதைப்போலவே உருவானது… அவைகளும் வெற்றி கண்டன.. அப்படி டிரெண்ட் செட்டிங் படமான ஆட்டோஃகிராப் வரும் மே மாதம் மீண்டும் திரையரங்குகளில் திரையிட வேலைகள் மும்மரமாக நடைபெறுகிறது..
இப்போது ஆட்டோஃகிராப் படத்தின் ஒரு முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது… இந்தியாவில்
முதல் முறையாக  AI தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் ஒரு படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
எதிலும் முன்னோடியாக முயற்சிகளை மெனக்கெடும் இயக்குனர் சேரன் AI தொழில்நுட்பத்தில் ஏற்கனவே வெளியான ஆட்டோஃகிராப் திரைப்படத்திற்கு உருவாக்கியிருப்பதை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் திரையுலகத்தினர்..
#autographmovie
Comments (0)
Add Comment