ராஜா செந்தில், சிந்தா கோபாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் ஜி.பி.ரவிகுமார் தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி, அனன்யா, பாரதிராஜா, வடிவுக்கரசி, இளவரசு, சாய்ஸ், தம்பி ராமைய்யா மற்றும் பலர் நடித்து டிசம்பர் 27ல் வெளியாகும் படம் திரு மாணிக்கம்.
கதை
தமிழக எல்லையில் அமைந்துள்ள குமிளியில் லாட்டரிக்கடை நடத்துகிறார் சமுத்திரக்கனி. மனைவி அனன்யா, இரு பெண் குழந்தைகள். இரு மகள்களில் ஒரு மகளுக்கு பேச்சு சரியா வராது. சரி செய்ய லட்சக்கணக்கில் பணம் தேவை. இந்த சூழ்நிலையிலும் நேர்மையாக வாழ்ந்து வருகிறார் சமுத்திரகனி. .அவரிடம் பாரதிராஜா தன் குடும்ப சூழ்நிலையை சொல்லி சில லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார். லாட்டரிக்கு பணம் கொடுக்க அவரது பையில் கையை விடும்போதுதான் தெரிகிறது தன் பணத்தை எங்கோ தவறிவிட்டுவிட்டது தெரிந்து அழுகிறார். சமுத்திரகனி அவரது சூழ்நிலை தெரிந்து சீட்டை எடுத்து செல்லுங்கள் நாளை வரும்போது பணம் கொடுங்கள் என்கிறார். பாரதிராஜா சீட்டை பத்திரமாக வையுங்கள் நாளை வருகிறேன் என்கிறார். பாரதிராஜா சூழ்நிலை தெரிந்து பாரதிராஜாவுக்கு பஸ்க்கு பணம் கொடுத்து அனுப்புகிறார். இந்த சூழ்நிலையில் பாரதிராஜா வாங்கிய சீட்டுகளில் ஒரு சீட்டுக்கு ஒன்றரை கோடி விழுகிறது. அப்போதுதான் சமுத்திரகனியின் நேர்மைக்கு சோதனை வருகிறது. சமுத்திரகனியின் மனைவி(அனன்யா) உறவினர், குடும்பத்தார், என எல்லோருமே சமுத்திரகனியிடம் பாரதிராஜா பணம் கொடுக்கல அதனால பரிசு விழுந்த லாட்டரி பணம் நமக்குத்தான் சொந்தம் என சொல்ல சமுத்திரகனியோ பாரதிராஜாவிடம்தான் பணத்தை கொடுப்பேன் என சொல்ல பணம் ஒன்றரை கோடி வீட்டிற்கு கொண்டுவரவில்லையென்றால் குழந்தைகளுடன் செத்துவிடுவோம் என்று சொல்ல நேர்மையான சமுத்திரகனி என்ன முடிவெடுத்தார்? பணத்தை பாரதிராஜாவிடம் கொடுத்தாரா? இல்லையா? தன்னுடைய நேர்மையை தக்கவைத்துக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சமுத்திரகனி சிறப்பாக நடித்துள்ளார். அவரின் மனைவியாக அனன்யா நடிப்பில் அசத்தியுள்ளார். பாரதிராஜா பெரியவராக வாழ்ந்துள்ளார். இளவரசு, கருணாகரன், தம்பி ராமையா, சாம்ஸ், சமுத்திரகனி குழந்தைகள் என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
விஷால் சந்திரசேகரனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது. எம் சுகுமாரன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் நந்தா பெரியசாமி நேர்மையாக வாழும் ஒரு மனிதனின் வாழ்க்கையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.
குடும்பத்தோடு பார்க்கலாம் .