Take a fresh look at your lifestyle.

#arimapatti Sakthivel Movie Review

35

Life cycle Creations சார்பில் அஜிஷ் P பவன் K தயாரிப்பில் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் பவன், மேனகா எலென், சார்லி, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சூப்பர்குட் சுப்ரமணி, சேதுபதி ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்து மார்ச் 8 ல் வெளியாகியிருக்கும் படம் அரிமாபட்டி சக்திவேல்

கதை

அம்மாபட்டி கிராமத்தில் சாதிவிட்டு சாதி காதல் செய்து திருமணம் செய்து கொண்டால் ஊர்மனிதர்கள் ஆளை வைத்து கொலைசெய்துவிடுவார்கள். இப்படி இருக்கும் ஊரில் கதாநாயகன் கதாநாயகி ஊருக்கே தெரியாமல் காதல் செய் கிறார்கள் இவர்கள் காதல் ஊருக்கு தெரிந்தவுடன் இவர்கள் இருவரையும் கொலை செய்தார்களா?இல்லையா? சாதிப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததா? இல்லையா? என்பதை அம்மாபட்டி ஊரில் நடந்த உண்மைச் சம்பவத்தை சொல்லியிருப்பதே இப்படத்தின் கதை.

கதாநாயகனாக பவன் நடிப்பிலும் சண்டைக் காடசிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாகமேகனா எலென் நன்றாக நடித்துள்ளார். மற்றும் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சூப்பர்குட் சுப்ரமணி, சேதுபதி ஜெயச்சந்திரன் என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். J P மேனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். மணி அமுதவனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.

இயக்குநர் ரமேஷ் கந்தசாமி அரிமபட்டி கிராமத்தில் நடந்த சாதிகொடுமை உண்மை சம்பவத்தை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார் பாராட்டுக்கள்.