Take a fresh look at your lifestyle.

எழுதி இயக்கியுள்ள படம். நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே திரைவிமர்சனம்

45

பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப்குமாரின் தயாரிப்பில் சித்தார்த் நாயகனாக நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பிரசாத் ராமர் எழுதி இயக்கியுள்ள படம்.
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.
செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரண் கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்து மார்ச் 8 அன்று
எஸ். ஹரி உத்ராவின் உத்ரா புரொடக்ஷன்ஸ் மூலம் 75 திரையரங்குகளில் வெளியாகிறது

கதை

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்தும் பாசிட்டிவாக பேசும் படம்.

கதாநாயகன் சேட்டிங் மூலம் பல பெண்களுடன் பழகி தனது வேலை முடிந்ததும் கழட்டி விட்டு விடுவார். இப்படி சென்றிருக்கும் கதையில் சேட்டிங் மூலம் பழக்கமான கதாநாயகி மாயவரத்திலிருந்து போன் செய்து பேசுகையில் தனக்கு பிறந்தநாள் என்று சொல்ல கதாநாயகிக்கு சர்ப்ரைஸாக நேரில் சென்று கிப்ட் கொடுத்து தனது ஆசையையும்நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நண்பனை அழைத்துக் கொண்டு பைக்கில் மதுரையிலிருந்து மாயவரம் செல்கிறார் கதாநாயகன். அவர் ஆசைப்பட்டபடி அவரது எண்ணம் நிறைவேறியதாக? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் செந்தார் பாண்டியன் சிறப்பாக கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைசிறப்பாக செய்துள்ளார். கதாநாயகியாக ப்ரித்தி கரண் நன்றாக நடித்துள்ளார். மற்றும் இதில் நடித்த
சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பிரதிப் குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.

இன்றைய இளைஞர்களின் எண்ணத்தை கதையாக எடுத்துக் கொண்டு அழகாக திரைக்கதயமைத்து
அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய ஒரு கண்ணியமான அதே சமயம் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படத்தை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் ராமருக்கு பாராட்டுக்கள்.