Take a fresh look at your lifestyle.

J Baby Movie Review

33

பா ரஞ்ஞித் தயாரிப்பில் சுரேஷ்மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் மற்றும் பலர் நடித்து மார்ச் 8 அன்று வெளியாகும் படம் J பேபி.

கதை

படத்தின் ஓப்பனிங்கில்போவிஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி காவலர் தினேஷ்க்கும் மாறனுக்கும் போன் செய்கிறார். தினேஷ்ஷும் மாறனும் அண்ணன் தம்பிகள் இருவரும் பேசிக்கொள்வதில்லை.போலிஸ் அழைத்தவுடன் என்ன விஷயம் என்று தெரியாமல் இருவரும் போலிஸ் ஸ்டேஷன் வருகின்றனர். ஸ்டேஷன் வத்தவுடன்தான்தெரிகிறது தன் அம்மாவான ஊர்வசி பேராப்பூர் போலிஸ் ஸ்டேஸனில் இருப்பதாக சொல்கிறார் இன்ஸ்பெக்டர்.ஊர்வசியை அழைத்துவர சொல்லி இருவரையும் அனுப்புகிறார் இன்ஸ்பெக்டர். ஊர்வசி ஊரைவிட்டு ஊர் மகன்கள் மகள்ளை விட்டு ஏன் சென்றார்? அண்ணன் தம்பியான தினேஷ், மாறன் ஊரைவிட்டு ஊர் சென்ற அம்மாவை கஷ்டப்பட்டு தன் வீட்டுக்கு அழைத்து வந்தார்களா? இல்லையா? அண்ணன் தம்பி ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஊர்வசி கொடுத்த கதாபாத்திரத்தைசிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார் பல இடங்களில். கதாநாயகனாக தினேஷ் மற்றும் மாறன் இருவரும் அண்ணன் தம்பியாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சபிதாராய், இஸ்மத் பானு, மெலடி என இதிவ் நடித்த அனைவருமேகொடுக்கப்பட்ட கயாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். ஜெயந்த் சேதுமாதவனின்ஒளிப்பதிவு அருமை. டோனி பிரிட்டோவின் இசையில் பாடவ்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.

தான் பெற்றெடுத்த குழந்தைகளை தாய் நன்றாக பார்த்துக்கொள்கிறாள். அதே தாய் வயதாகும்போதுஅவளும் குழந்தைதான் அதை புரிந்துகொண்டுவயதான தாய் தந்தையரை குழந்தைபோல நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வாழக்கையின் யதார்த்தை உணர்வுப்பூர்வமாக எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கும் இயக்குநர் சுரேஷ்மாரிக்கு பாராட்டுக்கள். பார்க்க வேண்டிய படம்.