மது நாகராஜன் தயாரிப்பில்
ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா சுப்பிரமணியன், விலங்கு கிச்சா ரவி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகியுள்ள படம் “ரணம் அறம் தவறேல்”. அர்ரோல் குரோலி இசையமைத்துள்ள பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதை
சென்னையில் அடுத்தடுத்த இடங்களில் கால், கை, உடம்பு என தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகின்றன. காவல் நிலையத்தில் குற்றச் செயலுக்கான கிரைம் ஸ்டோரி எழுதுபவரும், குற்றவாளிகளை உருவங்களை ஸ்கெட்ச் செய்பவருமான வைபவ் விசாரணைக்கு உதவ வருகிறார். அவரின் முயற்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் வெவ்வேறு நபர்களுடையது என தெரிய வருகிறது. அதேசமயம் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். இதனால் வழக்கு தான்யா ஹோப் கைக்கு வருகிறது. இவரும் வைபவ் இருவரும் இணைந்து வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கும்போது அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருக்கின்றன. இறுதியாக உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை
இப்படத்தில் வைபவ், தான்யா ஹோப், சுரேஷ் சக்கரவர்த்தி, நந்திதா, ஜீவா சுப்பிரமணியம் உள்ளிட்ட சில கேரக்டர்களை சுற்றி தான் கதையானது நகர்கிறது.
சிவாவாக வரும் வைபவ் குற்றங்களை கண்டுபிடிக்க உதவுபவராகவும், ஸ்கெட்ச் செய்து ஒருவரின் உருவத்தை கண்டறியும் நபராகவும் சிறப்பாக நடித்துள்ளார். இது அவரின் 25வது படம் என்பதால் நடிப்பில் வெரைட்டி காட்டியுள்ளார்.
அழகான நந்திதா ஸ்வேதாவிற்கு அம்மாவாக உணர்ச்சிபூர்வமான கேரக்டர். பாசம், பழிவாங்கல் என இது வரை நாம் பார்க்காத நந்திதாவாக சிறப்பாக நடித்துள்ளார்.
அழகாக ரொமான்ஸ் செய்யும் தான்யா ஹோப் ஒரு டெரர் போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். சுரேஷ் சக்ரவர்த்தி, ‘விலங்கு’ கிச்சா, சரஸ் மேனன் மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்குநர் ஷெரிப் முதல் பாதியை சுவாராஸ்யமாகசொன்னவர் இரண்டாம் பாதியில் தடுமாறியிருக்கிறார். கதையை இன்னும் கொஞ்சம் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். பாராட்டுக்கள்.
≈