Take a fresh look at your lifestyle.

Birtmark Movie Review

46

ஸ்ரீ ராம் சிவராமன் தயாரிப்பில்
இயக்குனர்- விக்ரம் ஸ்ரீதரன்
இயக்கத்தில் ஷபீர் கல்லரக்கல் , மிர்ணா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பர்த் மார்க்.
இசை – விஷால் சந்திரசேகர்

கதை

கார்கில் போருக்கு பின்னர் அதிலிருந்து திரும்பிய சில வீரர்கள் ‘post war trauma’ எனும் மனநிலை பாதிப்பில் பாதிக்கப்பட்டனர். அதனை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ராணுவ வீரராக படத்தின் நாயகனாக ஷபீர் கல்லரக்கல் நடித்துள்ளார். டேனியலாக ஷபீரும் அவருடைய மனைவி ஜெனிஃபராக மிர்ணாவும் நடித்துள்ளனர். திருமணமான சில நாளில் கர்ப்பமான மனைவியை இயற்கை முறையில் பிரசவம் பார்க்கவும் மேலும் தனக்கு உள்ள மனச்சிக்கலுக்கு சிகிச்சையை எடுத்துக் கொள்ளவும் தன்வந்திரி குழந்தைபேறு கிராமத்திற்கு தனது மனைவியை அழைத்துச் செல்கிறார் . இந்த சமயத்தில் கற்பமாக இருக்கும் மனைவியின் குழந்தைக்கு நாம் தான் அப்பாவா? என்கிற சந்தேகம் ஷபீருக்கு ஏற்படுகிறது . இதன் பின் தனது மனைவியின் பிரசவத்தை எப்படி நடத்தினார் இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை நிகழ்ந்தது என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

சார்பட்டா பரம்பரை படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷபீர் . இதனை தொடர்ந்து ‘நட்சத்திரம் நகர்கிரது’ , ‘கிங்க் ஆஃப் கோதா’ போன்ற படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம். இவருக்கு ஜோடியாக கர்ப்பிணிப் பெண்ணாக ஜெயிலர் புகழ் நடிகை மிர்ணா நடித்திருக்கிறார். ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருப்பார்.
இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்திரஜித், திப்தி என
இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம்.

இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் எடுத்துக் கொண்ட கதைக்தையை மேக்கிங்கிலும் திரைக்கதையிலும் எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.