Take a fresh look at your lifestyle.

வித்தைக்காரன் விமர்சனம்

33

வித்தைக்காரன் விமர்சனம்

K. விஜய் பாண்டி தயாரிப்பில்
இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா,
ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணிய சிவா, மெட்ராஸ் பட புகழ் பவெல் நவகீதன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகியுள்ள
. படம் வித்தைக்காரன் யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்
வெங்கட் பரத் இசையமைத்துள்ளார்.

கதை

மாயாஜால நிகழ்ச்சி நடத்தும் சதீஷ்
மருத்துவமனையில் அடிபட்டு தனக்கு ஒருநாள் மட்டும் நடந்த நிகழ்வுகளை மறக்கும் நாயகனாக கதையைத் தொடங்கும் சதீஷ், தங்கம், வைரம் கடத்தும் ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா கும்பலை ஏன் தொடர்பு கொள்கிறார்? அந்தக் கும்பலுக்கும் சதீஷ்க்கும் இடையே என்ன தொடர்பு? அந்த மூவரையும் சதீஷ் ஏன் பழிவாங்கினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக சதீஷ். ஏடிஎம் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பணத்தை சாதுர்யமாக கொள்ளையடிப்பது, மூன்று பெரிய தாதாக்களை அணுகி அவர்களை ஒரே களத்துக்குள் கொண்டு வருவது, பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட ஏர்போர்ட்டின் சேப்ஃடி லாக்கருக்குள் நுழைந்து வைரத்தை கைவசப்படுத்துவது, எதிரிகளை சந்தர்ப்பம் அமைத்து சிக்க வைப்பது என தனக்கான காட்சிகளில் காமெடி பங்களிப்பைக் குறைத்துக் கொண்டு இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். இன்ட்ரோ சாங்கில் ஈடுபாட்டுடன் உற்சாக ஆட்டமும் போட்டிருப்பது சிறப்பு. நாயகி சிம்ரன் குப்தா புலனாய்வு நிருபராக சிறப்பாக நடித்துள்ளார்.

மாரி, டாலர் அழகு, கல்கண்டு ரவி என்ற பெயர்களைச் சுமந்த தாதாக்களாக ஆனந்தராஜ், இயக்குநர் சுப்ரமணிய சிவா, மதுசூதன்… மூவரில் ஆனந்த்ராஜ் சிரிக்க வைக்கிறார். தன் கையாளாக இருக்கிற ஜப்பான் கேட்கும் ஏடாகூட கேள்விகளுக்கு பதில் சொல்லி சமாளிக்கிற எபிசோடுகள் ரகளை. அடியாளாக வருகிற சாம்ஸ் ‘அவனை தூக்கட்டுமா?’, ‘இவனை வெட்டட்டுமா?’ என்றெல்லாம் காட்டும் வெட்டி பந்தா கலகலப்பூட்டுகிறது. ஜப்பானின் லொடலொட பேச்சும், துறுதுறுப்பான குறும்புகளும் முகபாவமும் ரசிக்க வைக்கின்றன.
ஜான் விஜய், மாரிமுத்து என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

வெங்கட் பரத்தின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. யுவ கார்திதிக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

அயன் படத்தில் வருவது போல விமான நிலையத்தில் தங்கம், வைரம் கடத்தும் மாரி கோல்ட், டாலர் அழகு மற்றும் கல்கண்டு கும்பலுக்கும்
சதீஷ்க்கும் என்ன தொடர்பு, அவர்களுடன் எப்படி டீல் செய்து நாயகனான சதீஷ் ஜெயிக்கிறார் என்பதை
நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் வெங்கி பாராட்டுக்ள்