Take a fresh look at your lifestyle.

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டுமையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2023 கே ஜி எப் பில் துவங்குகிறது

44

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டுமையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2023
கே ஜி எப் பில் துவங்குகிறது.

திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்கள் இயக்குவதோடு திரைப்படங்கள் தயாரிக்கவும் செய்கிறார்.

நீலம் பண்பாட்டு மையம் பெயரில் பண்பாட்டு நிகழ்வுகளையும் நடத்திவருகிறார்.

வருடா வருடம் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சியும் நடத்திவருகிறார்.

பல்வேறு இசைக்கலைஞர்கள், பாடகர்கள், நடனக்கலைஞர்கள், கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.

மார்கழியில் மக்களிசை 2023 ம் ஆண்டு இந்த வருடம் 5 நாட்கள் நடைபெறவிருக்கிறது.

டிசம்பர் 23, கே ஜி எப் ,
டிசம்பர் 24 ஓசூர்,
டிசம்பர் 28, 29, 30 ஆகிய நாட்கள் சென்னையிலும் நடைபெறவிருக்கிறது.

முதல் நாள் நிகழ்ச்சியாக
நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டை. கோலார் தங்க வயல், கர்நாடகா.
கே ஜி எப் பில் கோலாகலமாக துவங்கவிருக்கிறது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், பாடகர்கள், கிராமிய கலைஞர்கள் என இந்தியா முழுவதிலிருந்தும் பலர் இதில் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளில் திரைப்பட கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பலர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

வாருங்கள் கொண்டாடுவோம்.