திரைப்பட விமர்சனம்.
இந்தி மொழியில் காமெடி சென்டிமென்ட் கலந்து உருவாகி வெளியாகியுள்ள படம், டன்கி. ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்தை, ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருக்கிறார். ஷாருக்கான், தாப்சி, விக்கி கௌஷல், போமன் இரானி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
கதை
சட்டவிரோதமாக எல்லையை தாண்டிச் செல்லும் பயணம் ‘டன்கி’ (Dunki) என்று அழைக்கப்படுகிறது. அப்படியாக உயிரைப் பணயம் வைத்து வேறொரு நாட்டில் தஞ்சம் புகும் மக்களின் வலியையும், அதற்கு எழும் தேவையையும் பேசுகிறது
பஞ்சாபில் உள்ள லால்டு என்ற கிராமத்தில் வாழ்ந்து வரும் மன்னு (டாப்ஸி), புக்கு (விக்ரம் கோச்சார்), பல்லி கக்கட் (அனில் குரோவர்) ஆகிய மூவரும் வெவ்வேறு வகையில் பணப் பிரச்சினையில் சிக்கி தவிக்கின்றனர். தங்கள் குடும்பத்தை காப்பாற்றவும், பணப் பிரச்சினையிலிருந்து மீளவும் லண்டன் செல்ல முடிவெடுக்கின்றனர். இவர்களுடன் ராணுவ அதிகாரியான ஹார்டி சிங்கும் (ஷாருக்கான்) இணைந்து கொள்கிறார். பணம், மொழிப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் விசா தர மறுக்கப்படுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் முடிவில் சட்டவிரோதமாக‘டன்கி’முறையில் பயணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இவர்கள் லண்டன் சென்றனரா?, இல்லையா? இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
ஷாருக்கான் சிறப்பாக நடித்துள்ளார். டாப்ஸியும் நன்றாக நடித்துள்ளார்.
விக்கி கவுஷல். விக்ரம் கோச்சார், அனில் குரோவர், போமன் இரானி என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
ப்ரிதம் இசையில் பாடல்களும், அமன் பந்த் பின்னணி இசையும் சுமார் ரகம்.
சி கே முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் @ குமார் பங்கஜ் மூவரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
ஷாருக்கான் படம் என்றாலே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இவர் தமிழ் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளதால்இந்த படத்திற்கு தமிழ் நாட்டிலும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை. படம் காமெடியாக சென்றாலும் அவ்வப்போது சென்டிமென்ட் என்று புகுத்தி சோதிக்கிறார்கள்முதல்பாதி ரசிக்கவைக்கிறது. இரண்டாம் பாதி சோதிக்கிறது. படமும் நீளம்.
3 இடியட்ஸ், பி கே போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இதில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார்.
வெளிநாடு செல்ல கனவு காணும் எளிய மக்களின் பிரச்சினையை சுவாராஸ்யமாக சொல்ல முயற்சித்ததற்கு பாராட்டுக்கள்.