Take a fresh look at your lifestyle.

“புதுயுகம்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

65

சென்னை:

“என்றென்றும்”

புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறு தீபாவளி அன்று காலை 8:00 மணிக்கு பிரபல பின்னணி பாடகி சுர்முகி மற்றும் பல குரல் வித்தகர் இசைக் கலைஞர் சுட்டி அரவிந்த் இணைந்து அசத்திய “என்றென்றும்”.நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது .

இதில் பாடகி சுர்முகி தனது இசைப்பயணம் எவ்வாறு உருவானது, தான் பாடிய பாடல்கள், தனக்கு பிடித்த ராகம் எனக் கூறி தனது குரலில் பல்வேறு பாடல்களை பாடியும், சுட்டி அரவிந்த் ப்ளூட் வாசிக்க சுர்முகி அவர்கள் பாடி அசத்திய இனிமையான சிறப்பு நிகழ்ச்சி “என்றென்றும்”.

‘சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை’

புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறு தீபாவளி அன்று மாலை 4:00 மணிக்கு கலை உலக மார்க்கண்டேயன் திரு.சிவகுமார் அவர்கள் ‘சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை’என்ற தலைப்பில் தனது சிம்ம குரலில் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த கவியரசர் மெல்லிசை மன்னர் இருபதாவது ஆண்டு விழாவின் சிறப்பு தொகுப்பு…நமது புதுயுகத்தில் காணத்தவறாதீர்கள்…