Take a fresh look at your lifestyle.

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி!

59

CHENNAI:

நாக சைதன்யா நடிப்பில், சந்து மொண்டேடி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்கும் படம் தான் #NC23. இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவர, நடிகை சாய் பல்லவி இப்படத்தில் இணைந்துள்ளார்.

இயக்குனர் சந்து மொண்டேடியுடன் “யுவ சாம்ராட்” நாக சைதன்யாவின் பான்-இந்தியா திரைப்படமான #NC23-ன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பே ப்ரீ புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கிய படக்குழு, விரைவில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பன்னி வாசு இப்படத்தை தயாரிக்கிறார், அல்லு அரவிந்த் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல வெற்றிகரமான படைப்புக்களை உருவாக்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் பெருமையுடன் வழங்குகிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் NC23 தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளை மிக உயர்ந்த தரத்துடன் உருவாக்கப்படுவதை உறுதி செய்கிறது. ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளின் ஒரு பகுதியாக, இப்படத்தின் முன்னணி கதாநாயகியாக நேற்று அணியில் இணைந்தார் சாய் பல்லவி.

இன்று, சாய் பல்லவி இணைந்த புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரம்மாண்டமான படத்தில் கதாநாயகியாக நடிக்க மிகவும் அழகான மற்றும் திறமையான நடிகை சாய் பல்லவி வருகிறார் என்று தெரிவித்தது.

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இதற்கு முன்பு சூப்பர்ஹிட் லவ் ஸ்டோரி படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உருவாகவுள்ள NC23 படத்தின் மூலம் தங்களின் அழகான கெமிஸ்ட்ரி வெளிப்படுத்தி நம்மைக் கவரவுள்ளார்கள்.

#NC23 நாக சைதன்யா மற்றும் சந்து மொண்டேடி இணையும் இப்படம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் உயர் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. தயாரிப்பாளர்கள் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளுக்கே நல்ல பட்ஜெட்டை செலவு செய்கிறார்கள். மேலும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விரைவில் தயாரிப்பு குழு அறிவிக்கவுள்ளது.

நடிகர்கள்: நாக சைதன்யா, சாய் பல்லவி

தொழில்நுட்பக் குழு:

எழுத்தாளர், இயக்குனர்: சந்து மொண்டேட்டி
பேனர்: கீதா ஆர்ட்ஸ்
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாசு
PRO: யுவராஜ்
மார்க்கெட்டிங் : பர்ஸ்ட் ஷோ

The Beautiful Sai Pallavi Joins The Voyage Of Naga Chaitanya, Chandoo Mondeti, Allu Aravind, Bunny Vasu, Geetha Arts #NC23, Pre-production In Full Swing, Shoot Begins Soon

The pre-production works of Yuva Samrat Naga Chaitanya’s Pan India film #NC23 with director Chandoo Mondeti are in full swing. The team that started the pre-production works nearly a month ago and the works are in full swing, as they are planning to begin the film’s shoot soon. Bunny Vasu will produce the movie, while Allu Aravind proudly present it on the leading production banner Geetha Arts that made numerous cult hits in Telugu as well as Hindi. The backing of Geetha Arts ensures NC23 will be made with the uppermost quality in production and technical front.

As part of pre-production works, the film’s lead actress also joined the team yesterday. But they revealed her identity today. The very beautiful and talented actress Sai Pallavi comes on board to play the female lead in this magnum opus based on real incidents. The duo previously worked together in the superhit Love Story. They are going to enrapture us with their sparkling chemistry in the new film.

#NC23 will be the highest-budgeted movie for both Naga Chaitanya and Chandoo Mondeti. The movie will be made grandly with high production and technical standards. The makers are spending a good budget on pre-production works alone.

They will announce the other cast and crew of the movie soon.

Cast: Naga Chaitanya, Sai Pallavi

Technical Crew:
Writer, Director: Chandoo Mondeti
Banner: Geetha Arts
Presents: Allu Aravind
Producer: Bunny Vasu
PRO: Yuvraaj
Marketing: First Show