Take a fresh look at your lifestyle.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், MM Originals வெளியீட்டில், நட்பை கொண்டாடும் “மக்கா மக்கா” ஆல்பம் பாடல்!

113

சென்னை:

தமிழில் சுயாதீன இசை ஆல்பங்களை ஊக்குவிக்கும் வகையில்,  தொடர்ந்து சிறந்த இசை ஆல்பம் பாடல்களை தயாரித்து வரும் MM Originals  நிறுவனத்தின் சார்பில், ப்ரதிமா குப்பாலா, HK ரவூஃபா வெளியிட, Etcetera Entertaiment சார்பில் V. மதியழகன் தயாரிப்பில்,  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், புதிதாக உருவாகியிருக்கும் பாடல்  “மக்கா மக்கா”.  சமீபத்தில் இணையத்தில் வெளியான இப்பாடல் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வைகளை குவித்து சாதனை படைத்து வருகிறது.

நட்பை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள இப்பாடலில், தமிழ் திரையுலக பிரபலங்களான  அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன், முகேன் ராவ்  இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் அரசகுமார் இப்பாடலை இயக்கியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பா விஜய் வரிகளில், இப்பாடலை பம்பா பாக்யா மற்றும் சத்ய பிரகாஷ் பாடியுள்ளனர்.

இளைஞர்களை கவரும் வகையில் ஃப்ரஷ்ஷான ஃபர்ண்ஷிப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். RD ராஜசேகர் ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் பணிகளை செய்துள்ளனர்.  Etcetera Entertaiment சார்பில் V. மதியழகன் இந்த பாடலை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்பாடல்  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இளைஞர்கள் ப்ளேலிஸ்டில் தவறாது இடம் பிடிக்கும் உற்சாகமிக்க பாடலாக  YouTube தளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பார்வைகளை குவித்து  சாதனை படைத்து வருகிறது.

தமிழ் இசை உலகில் தொடர்ந்து சிறப்பு மிக்க சுயாதீன ஆல்பம் பாடல்களை தயாரித்து வரும் MM Originals நிறுவனம் Media Masons நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். Media Masons  நிறுவனம் தமிழின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் பல புகழ்மிக்க  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது. தமிழ் இசையுலகில், சுயாதீன கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ப்ரதிமா குப்பாலா, HK ரவூஃபா ஆகியோர் MM Originals நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகின்றனர்.