மது கடைக்கு எதிராக போராடும் ஆசிரியை கதை
நாயகனாக தீரன் நாயகியாக ரேஷ்மா வெங்கடேசன் அறிமுகமாகிறார்கள்
சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத் சம்பத் ராம் ஐ டி அரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை பிரபு சாலமனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ் டி மணிபால் டைரக்டு செய்துள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி டி ஜி விஸ்வப்ரசாத் தயாரிப்பிலும் விவேக் குச்சி பொட்ல இணை தயாரிப்பிலும் உருவாகி ஆகஸ்ட் 23 ல் வெளியாகிறது
கதை
வட சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஒரு மதுபான கூடம் தான் மைய கரு. இந்த பாரை கைப்பற்ற சக்தி வாய்ந்த இரு குழுக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவு கிறது. இது ஒருபுறம். மறுபுறம் மதுக்கடையே இருக்க கூடாது என்று பள்ளி ஆசிரியை (கதாநாயகி ரேஷ்மா) போராடுகிறார். இந்த மூன்று தரப்புக்கு இடையே நடக்கும் மோதல்களை காரமும் சாரமும் குறையாமல் படமாக்கி இருப்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக தீரன் கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். கதாநாயகி ரேஷ்மாவுக்கு வலுவான கதாபாத்திரம் அதை சிறப்பாக செய்துள்ளார். அருள்தாஸ் சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் சார்லஸ் வினோத் ,ஸ்ரீநாத். சம்பத்ராம், ஜ டி அரசன் மூன்று சிறுவர்கள், பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். தீசன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
மது அருந்தக்காடாது மதுபானகடை ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எல்லோருக்கும் பிடித்தமாதிரி சாலா படத்தை கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.