தயாரிப்பாளரும் நடிகருமான ஜேஎஸ்கே இயக்குநராகும் படம், ‘ஃபயர்’. இதில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளார்.
கதை
பாலாஜி முருகதாஸ் பிஸியோதெரபிடாக்டர். அவரை காணவில்லை என்று அவரது தாய் தந்தை போலிஸ் அதிகாரி JSK விடம் புகார் கொடுக்கின்றனர். JSK விசாரணையில் பாலாஜி முருகதாஸிடம் வேலை செய்யும் சாந்தினி, வட்டிக்காரனிடம்மாட்டி தவிக்கும் ரக்சிதா மகாலட்சுமி, ஜிம்மில் அறிமுகமாகும் சாக்ஷி அகர்வால், மற்றும் காயத்ரி இந்த நால்வரிடமும் நல்லவன்போல் நடித்து அவர்களை தனக்கு விருந்தாக்கி கொண்டு அதை வீடியோவாக எடுத்து மிரட்டி மினிஸ்டருக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் விருந்தாக்குகிறான் என்பதை விசாரணையில் கண்டுபிடிக்கிறார்.அதன்பிறகு ஒவ்வொருவரிடமும் விசாரணையை தொடர்கிறார் அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் சுவாராஸ்யமான படத்தின் மீதிக்கதை போலீஸ் அதிகாரியாக ஜே எஸ் கே சதீஷ்குமார். நடித்திருக்கிறார். பாலாஜி முருகதாஸ் ஆன்ட்டி ஹீரோவாக கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார் பாலாஜி முருகதாஸிடம் ஏமாறுபவர்களாகரச்சிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், காயத்ரி, சாக்ஷி அகர்வால் என நான்கு பேர் நடித்துள்ளார்கள்நால்வரின் நடிப்பும் அருமை. ஜீவா, சிங்கம்புலி என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். சதீஷ் ஜி பாபுவின ஒளிப்பதிவு பணத்திற்கு பெரியபலம். ஜீவாவின் வசனம் அருமை. டிகேவின் இசையில் பாடல்களும். பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
தயாரிப்பளாகவு ம்விநியோகஸ்தராகவும் பல வெற்றிபடங்களைகொடுத்த JSK சதீஷ்குமார் நாட்டில் தற்போது நடக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சம்பவங்களை கிரைம் திரில்லர் பாணியில் எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்து இயக்கத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். பாராட்டுக்கள். பெண் குழந்தைகளை ஆசையாக வளர்க்கிறோம். ஆனால், அவர்களைப் பாதுகாப்பாக வளர்க்கிறோமா என்பது கேள்விகுறிதான்.
அதைத்தான் இந்தப் படம் பேசுகிறது. மொத்தத்தில் ஃபயர் படம் உங்களை குஷிப்படுத்தும், கிளுகிளுப்பாக்கும், மகிழ்விக்கும்