சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 23 ல் வெளியாகும் படம் கொட்டுக்காளி.
கதை
மீனாவுக்கும்(அன்னா பென்), பாண்டிக்கும்(சூரி) திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள். படித்து முடிக்கட்டும் என்று காத்திருக்கும் சூழ்நிலையில் மீனா படிக்கின்ற இடத்தில் ஒரு பையனை காதலிக்கிறாள் இதனை தெரிந்துகொண்ட வீட்டில் உள்ளவர்கள் மீனாவுக்கு பேய் பிடித்துவிட்டது. உடம்புக்கள் இருக்கும் மருந்தையும் எடுக்கவேண்டும் அப்படி செய்தால்தான் சூரிக்கும் அன்னபென்னுக்கும் திருமணம் நடைபெறும் என்று பேயை விரட்டி மருந்தை எடுக்க அன்னபென்னை சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள் சூரி பேமலியும் அன்னபென் பேமலியும். அப்பொழுது சூரியும் உடன் செல்கிறார். சாமியாரிடம் செல்லும் பயணமும் அன்னபென் உடலில் உள்ள பேயையும் மருந்தையும் எடுத்து சூரிக்கு திருமணம் செய்து வைத்தார்களா? இல்லையா? முடிவு என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
பாண்டியாகவே வாழ்ந்திருக்கிறார் சூரி. மீனா ஒரு காதல் பாடலை முணுமுணுப்பதை கேட்டு அது வரை அடக்கி வைத்திருந்த எரிச்சலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் சூரி. மீனாவாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அன்னா பென். பேசாமலேயே தன்னை பற்றி அனைவரையும் பேச வைத்திருக்கிறார். மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
B சக்திவேலின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
கூழாங்கல் வெற்றி படத்தை கொடுத்த
P S வினோத்ராஜ். கொட்டுக்காளி படத்தையும் நன்றாக எடுத்து பட ரிலீஸ்க்கு முன் பல விருதுகளை வென்று எல்லோரும் ரசிக்கும்படி படத்தை கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.