Take a fresh look at your lifestyle.

“அஸ்வின்ஸ்” திரை விமர்சனம்!

130

 சென்னை:

கதாநாயகன் வசந்த் ரவி சொந்தமாக ஒரு  யூட்யூப் சேனல் நடத்தி வருகிறார். வசந்த்ரவி மற்றும் அவரின் நண்பர்கள் சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள். இவர்கள் அமானுஷ்யங்கள் நிரம்பிய இடங்களுக்குச் சென்று வீடியோ எடுக்கும் யூடியூபர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு பேய் பிசாசுகள் இருக்கும் இடங்களைத் தேடி சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளைக் கவரும் வகையில் ஓர் ஆவணப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. லண்டனில் உள்ள தீவில் தனியாக அமைந்திருக்கும் ஒரு ஆடம்பரமான பங்களாவில் தங்களது யூடியூப்  சேனலுக்காக படப்பிடிப்பு நடத்த முடிவு செய்கிறார்கள். அந்த பங்களாவிற்குள் செல்லும் அவர்கள், அங்கு இருக்கும் அமானுஷ்ய சக்திகளிடம் மாட்டிக்கொண்டு, வெளியில் செல்லமுடியாமல் தவிக்கின்றனர்.

அந்த சமயத்தில் அமானுஷ்ய சக்திகளிடம் மாட்டிக் கொண்டு ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். கதாநாயகன் வசந்த்ரவி மட்டும் உயிருடன் இருக்கிறார். கடைசியில் அந்த அமானுஷ்ய சக்திகளிடமிருந்து  வசந்த்ரவி மீண்டு வந்தாரா? இல்லையா?என்பதை அமானுஷ்ய விஷயங்கலை புகுத்தி, அதன் பின்னணியை சுவாரஸ்யமாக நொடிக்கு நொடி திகிலடைய செய்து பயமுறுத்துகின்ற விதத்தில் சொல்வது தான் ‘அஸ்வின்ஸ்’

இப்படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி திறமையான நடிப்பை கொடுத்து இருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்க்கு ஏற்றவாறு சிறந்த  நடிப்பு மூலம் அனைவரும் ரசிக்கும்படி மிரட்டி இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் அசத்தி இருக்கிறார்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் விமலா ராமன், தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை  மிக சிறப்பாக  செய்திருக்கிறார்கள்.

எட்வின்சாகேவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பரவசமூட்டுகின்றன. அவருடைய ஒளிப்பதிவு படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.

விஜய்சித்தார்த்தின் பின்னணி இசையில் ஒவ்வொரு ஒலியும் இயல்பான திகில் படங்களுக்கானதாக அல்லாமல் இதயம் நடுங்குகிற மாதிரி, நம் உடலை  அதிர வைக்கிறார்.

தொழில்நுட்ப ரீதியாக ஒரு திகில் படத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை  மிக சிறப்பாக  இயக்கியிருக்கும் தருண் தேஜா, அமானுஷ்ய விசயங்களை வைத்துக் கொண்டு ஆழமான உளவியல் சிக்கல்கள் பற்றி மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஆங்கிலப் படத்திற்கு நிகராக திகில் திரைக்கதையை வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெறுகிறார்.

மொத்தத்தில் “அஸ்வின்ஸ்” திகில் பட ரசிகர்களுக்கு விருந்து.

திரைநீதி செல்வம்.