அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கத்தில் டொவினோ தாமஸ், வினய், திரிஷா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஐடென்டிட்டி
கதை
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு இளம் பெண் துணிக்கடையில் ஆடை மாற்றுவதை ட்ரையல் ரூமில் வீடியோவாக எடுத்து ஒருத்தன் மிரட்டி பணம் கேட்கிறான்.
அப்படி ஒரு பெண்ணை மிரட்டும் போது, ஒருவன் அந்த பணம் கேட்டும் மிரட்டுபவனை அவன் இருக்குமிடம் தேடி சென்று அனைத்தையும் அழித்து அவனையும் கொன்று அந்த இடத்தையே எரித்து விடுகிறான்.
இந்த சம்பவத்தை திரிஷா நேரில் பார்க்கிறார். அப்போது அந்த செய்தியை தொலைக்காட்சியில் வெளியிட வேகமாக போக அவர் மீது லாரி மோதி பேஸ் ப்ளைண்ட் என்ற பாதிப்பு ஏற்படுகிறது.
தற்போது இந்த கேஸை வினய் விசாரிக்க, டொவினோ நன்றாக படம் வரைபவர், அவர் உதவியுடன் திரிஷாவிற்கு அந்த கொலை செய்தவன் முகம் மட்டும் நியாபகமிருக்க, அதை டொவினோ வரைகிறார்.
ஆனால், திரிஷா சொன்ன அத்தனை அடையாளமும் டொவினோ தாமஸுடன் ஒன்றி போக, அட இது என்னடா டுவிஸ்ட் என்று வினய் பார்வை டொவினோ மீது போக, அவரும் அப் நார்மலாக செயல்பட, சந்தேகம் வலுவாகிறது, இந்த நேரத்தில் நான் தான் அந்த கொலை செய்தேன் என்று ஒருவர் ஆஜராக, அட யார் தான்பா அந்த கொலை செய்தது என்ற சுவாரஸ்யமே இந்த Identity. படத்தின் கதை. டொவினோ தாமஸ் நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக வினய் மிரட்டியுள்ளார். திரிஷா கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ச்சனா ரவி, கோபிகா ரமேஷ் என இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசை ரசிக்க வைக்கிறது. அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இயக்குநர்கள் அகில் பால், அனஸ்கான் கிரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார். பாராட்டுக்கள். பார்க்கலாம்