Take a fresh look at your lifestyle.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’

101

சென்னை:

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே அஜித் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் துணிவு படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கையில் துப்பாக்கியுடன் அஜித் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.