Take a fresh look at your lifestyle.

PRENISS INTERNATIONAL (OPC) PVT LIMITED தயாரிப்பு நிறுவத்தின் 4 வது திரைப்படமானது

233

ஜுலை 14 பூஜையுடன் தொடங்கி 25 நாட்களாக ஆவடியில் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இப்படத்தின் TITLE கூடிய விரைவில் அறிவிக்கபடும். இரண்டாம்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 15 முதல் தொடங்கப்படுகிறது. அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுவருகிறது.
எட்டு தோட்டாக்கள் படத்தில் அறிமுகமான வெற்றி இப்படத்தின் HERO. உறியடி 2 வில் அறிமுகமான விஷ்மியா இப்படத்தின் HEROINE. வித்யா ப்ரிதிப் முக்கிய கதாப்பாத்திரதிலும் முன்னணி நட்சத்திரங்களான ஜீவா ரவி, தங்கதுரை, ஜார்ஜ், பேபிஜாய், பாலா போன்றவர்கள் நடிக்கின்றனர். மேலும் வனிதா விஜயகுமார் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் வித்தியாசமாக தோன்றுகிறார். இத்திரைப்படத்தில் கேரளாவிலிருந்து நந்து முதல்முறையாக தமிழில் அறிமுகமாகிறார். மலையாளத்தில் பிரிதிவ்ராஜியுடன் ஐயப்பனும் கோசியும், ஓட்டம் போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர் மற்றும் சில படங்களில் HERO வாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. இந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் M. ஷாம். இது இவருக்கு முதல் படம். ஒளிப்பதிவு ஜே.ஆர்.கே. இசை கணேஷ் சந்திரசேகர். எடிட்டிங் V.S விஷால். தயாரிப்பு நிர்வாகம் T.R ஜகன்
இப்படத்தின் முழு பொறுப்பையும் LINE PRODUER-ராக நடிகர் கோவை பாபு ஏற்றுயிருக்கிறார். தயாரிப்பு சேலம் பிரேம்நாத் சிதம்பரம்.