Take a fresh look at your lifestyle.

Xtreme Movie Review

4

ராஜவேல்கி ருஷ்ணா இயக்கத்தில் ராஜகுமார் நாகராஜ், ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்சத்திரா, அம்ரிதா ஹல்டர் , சிவம்தேவ் மற்றும் பலர் நடித்து ஜனவரி 3ல் வெளியாகும் படம் எக்ஸ்ட்ரீம்.
கதை
கட்டுமான பணி நடக்கும் கட்டிடம் ஒன்றில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை அது இளம் பெண் அபி நட்சத்திரா என்பதை கண்டுபிடிக்கிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறைக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்க, இறுதியில் கொலைக்கான பின்னணி என்ன ? கொலையாளி யார் ? என்பதை பரபரப்பான கிரைம் திரைல்லராக சொல்லியிருப்பதே எக்ஸ்ட்ரீம் படத்தின் கதை
 
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சின்னத்திரை பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி, போலீஸ் உடையில் கம்பீரமாக இருக்கிறார். ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் பெண் போலீஸ் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
 
கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா பாதிக்கப்படும் அப்பாவி ஏழை பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
 
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜ்குமார் நாகராஜ், . சத்தய சீலான் என்ற போலிஸ் கதாபாத்திரத்தில்சிறப்பாக நடித்திருக்கிறார்..
மாடர்ன் என்ற பெயரில் மற்றவர்களின் கவனத்தை சிதைக்கும் வகையில் ஆடை உடுத்தும் பெண்ணாக கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கும் அம்ரிதா ஹல்டர், தனக்கு தெரியாமலேயே ஒரு அப்பாவி பெண்ணின் அவல நிலைக்கு தான் காரணமானதை எண்ணி வருத்தப்படும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
 
வில்லனாக நடித்திருக்கும் சிவம் தேவ், ஆனந்த் நாக், அபி நட்சத்திராவின் அம்மாவாக நடித்திருக்கும் சரிதா, ராஜ்குமார் நாகராஜின் மனைவியாக நடித்திருக்கும் ராஜேஸ்வரி ராஜி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 
 
ஒளிப்பதிவாளர் டிஜே பாலாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம். இசையமைப்பாளர் எம்.எஸ்.ராஜ்பிரதாப்பின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. படத்தொகுப்பாளர் ராம்கோபி இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைத்திருக்கலாம்
 
இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படும் முதல் காட்சியிலேயே நம்மை கதைக்குள் பயணிக்க வைத்துவிடும் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா, இறுதிக் காட்சி வரை கொலையாளி யார்?, கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும், என்பதை யூகிக்க முடியாதபடி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார். 
 
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது மற்றும் போதை கலாச்சாரம் அதிகரிப்பது போன்ற விசயங்களை பிரச்சாரமாக அல்லாமல் கமர்ஷியலாகவும், கதைக்கு தேவையானதாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா, பாலியல் வன்கொடுமைகளின் பின்னணியாக சொல்லப்படும் பல காரணங்கள் இருந்தாலும், இதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு காரணத்தை கதைக்கருவாக வைத்துக்கொண்டு மக்களுக்கு கருத்து சொல்லியிருப்பதோடு, சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தும் கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்.
 
மொத்தத்தில், ‘எக்ஸ்ட்ரீம்’ பார்க்கலாம்.