ராமச்சந்திரன் இயக்கத்தில் தேவ் ராம்நாத், காயத்ரி, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பேச்சி
கதை
அரண்மனைக் காடு என்கிற மலை கிராமத்தில் சுற்றுலாவுக்கு வரும் ஓரு காதல் ஜோடி பேச்சி என்ற பேயால் இறக்கிறாரகள். அதே அரண்மணை காட்டுபகுதிக்குகெய்டு பால சரவணன் நண்பர்களாக வந்த குழுவை காட்டுக்குள் அழைத்து செல்கிறார் ஊரில் உள்ள கட்டுப்பாடு, அதன் பின்னணியில் இருக்கும் அமானுஸ்ய சம்பவங்களை நன்கு அறிந்த பால சரவணன் சுற்றிப் பார்க்க வந்திருக்கும் நண்பர்கள் குழுவினரிடம் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்லக்கூடாது என பல முறை எச்சரிக்கிறார்.
அவர் எச்சரிக்கையை மீறி, நண்பர்கள் செய்யும் வேண்டாத வேலை, காட்டில் காத்திருக்கும் பேய் பேச்சிக்கு அவர்கள் விருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. யார் அந்த பேச்சி? எதற்காக காட்டில் காத்திருக்கிறாள்? அவளிடம் காட்டுக்குள் சுற்றுலா வருபவர்கள் சிக்கினால் என்ன ஆகும்? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
வன ஊழியராக பால சரவணன். இதுவரை காமெடியில் மட்டுமே நடித்து வந்த பால சரவணன், இந்த முறை படு சீரியஸாக நடித்திருக்கிறார்.
நண்பர்கள் கூட்டத்தில் நன்கு முகம் அறிந்தவராக காயத்ரி. படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை நன்றாக நடித்து இருக்கிறார். க்ளைமாக்ஸில் அவர் தரும் ட்விஸ்ட் தான், பேயை விட பயங்கரமாக இருக்கிறது.
ஹீரோ தேவ் ராம்நாத், கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நடித்திருக்கிறார். உடன் நண்பர்களாக வரும் ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, மகேஷ் ஆகியோரும் தங்கள் நடிப்பை நன்றாக வெளிப்ப்படுத்திஇருக்கிறார்கள். பேச்சியாக வரும் பாட்டி படுபயங்கர பெர்ஃபாமன்ஸ் செய்து மிரட்டிவிடுகிறார்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின்
இசையும் பார்த்திபனின்
ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்
முதல் பாதி சுமாராக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. அதிலும் பேச்சியின் ஆட்டம் ஆரம்பித்ததும், காடு பற்றி எரிகிறது. இரவு இல்லாமல் பேய் படம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்ததற்கே அவர்களுக்கு சல்யூட் அடிக்கலாம். பகலில் பார்வையாளர்களை மிரட்டுவது அவ்வளவு எளிதல்ல. அதை முடிந்தவரை கையாண்டு சுவாராஸ்யமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராமச்சந்திரன். பாராட்டுக்கள்
பிரபல ஒளிப்பதிவாளர் கோகுல் மற்றும் வெயிலான் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், ஹாரர் ப்ரியர்களுக்கு கட்டாயம் புதுவித அனுபவம் தரும். குடும்பத்தோடு, குழந்தைகளோடு ஒரு முறை தியேட்டரில் படத்தை பார்க்கலாம்.