Take a fresh look at your lifestyle.

Boat Movie Review

25

சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு, கௌரிகிஷன், ஷாம்ஸ், சின்னிஜெயந்து, எம்.எஸ்.பாஸ்கர் மதுமிதா மற்றும் பலர் நடித்து வெளியாகிமிருக்கும் படம் போட்

கதை

1943ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் இந்த படத்தின் கதை அமைகிறது. இரண்டாம் உலகப் போர் ஒருபுறம், சுதந்திரப் போராட்டம் இன்னொருபுறம் இதில் கடற்கரை அருகே உள்ள முகாமை நோக்கி ஜப்பானிய விமானப்படை குண்டு போடப்போறாங்க என ஒரு தகவல் தீயாக பரவ அங்கே இருந்து தனது பாட்டியுடன் குமரன் (யோகி பாபு) தனது படகில் ஏறி கடலுக்குள் சென்று விட்டால் நிலத்தில் தான் குண்டு போடுவார்கள் தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார். அவருடன் மேலும், சிலர் அந்த படகில் ஏறிக் கொள்கின்றனர்.ஒரு கட்டத்தில் போட்டில் உள்ள மூவர் இறந்தால்தான் மற்றவர்கள் தப்பிக்க முடியும் என்ற சூழ்நிலை. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை

யோகி பாபு படகோட்டியாக கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். நூலகராக நடித்துள்ள எம்.எஸ். பாஸ்கர் ஸ்கோர் செய்கிறார். ஹீரோயினாக கெளரி கிஷன் அந்த கானா கர்நாடக சங்கீதம் பாடலில் ஸ்கோர் செய்து விட்டார். சாம்ஸ், ஷாரா, ஆங்கிலேய அதிகாரியாக நடித்துள்ள ஜெஸ்ஸி ஃபாக்ஸ் ஆலன், சின்னி ஜெயந்த், மதுமிதா மற்றும் லீலா என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆளமான பின் கதையை அமைத்து அவர்களுக்கு எழுதப்பட்ட வசனங்களும் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். ஜிப்ரான் பின்னணி இசை ரசிக்கவைக்கிறது. நீலக்கடலையும் இயற்கை அழகையும் மனிதர்களின் வெறுப்புணர்வையும் படம் பிடித்து காட்டியதில் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் உழைப்பும் பாராட்டுக்குரியது.

1943ல் நடக்கும் கதைக்களத்தை எடுத்துக் கொண்டு சாதி, மத பாகுபாடு, இன்றைய அரசியல் சூழலில் நிலவும் பிரச்சனை உள்ளிட்டவற்றை அரசியல் நய்யாண்டியுடன் கையாண்டு இருக்கும் விதம் தான் இந்த படத்தை ரசிக்க வைக்கிறது. இயக்குநர் சிம்புதேவனுக்கு பாராட்டுக்கள்