Jsb சதீஷ் இயக்கத்தில் ஷில்பா மஞ்சுநாத், ஆர்த்தி, A.வெங்கடேஷ் சென்ட்ராயன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து மார்ச் 8 ல் வெளியாகும் படம் சிங்கப்பெண்ணே
கதை
சிறுவயதில் முறையான நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரை அவரது அப்பாவே நீச்சல் பயிற்ச்சிக்கு போகக்கூடாது என தடுத்து நிறுத்துகிறார் அதையெல்லாம் தாண்டி ஷாலினி நீச்சல் வீராங்கனையானதும், அரசாங்கத்தின் நீச்சல் பயிற்சியாளராக தகுதி உயர்ந்து தனது ஊருக்கு வருகிறார் ஷாலினி.
அப்போது தன் வீட்டில் வேலை செய்யும் வேலக்காரியின் மகள் தேன்மொழி பூப்பெய்துகிறாள்.அதற்கான விசேஷம் நடக்கும் நாளன்று அவளுடைய குடிகார முறைமாமன் அந்த பெண்ணை நான்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்லி அடாவடி செய்கிறான்.
அவனிடமிருந்து தேன்மொழியை ஷாலினி காப்பாற்றி அவளிடமிருக்கும் நீச்சல் திறமையைக் கண்டறிந்து ஊக்குவித்து, அவளை சாதனையாளராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் நீச்சல் பயிற்சியாளர் ஷாலினி.
தேன்மொழியை சாதனையாளராக மாற்றிக்காட்ட ஷாலினி எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும், அதில் அவர் சந்திக்கிற சங்கடங்களையும் சவால்களையும் சொல்லியிருப்பதே படத்தின் கதை.
ஷாலினியாக ஷில்பா மஞ்சுநாத். நீச்சல் பயிற்சியாளர் பாத்திரத்துக்கு மிகமிக பொருத்தமான தேர்வு.சிறப்பாக நடித்துள்ளார்.
வறுமைச் சூழலில் பிறந்து வாழ்ந்து, திறமையினால் அதற்கேற்ற உயரத்தை எட்டிப் பிடிக்கிற முன்னுதாரண கதாபாத்திரத்தில் தேன்மொழியாக ஆர்த்தி. தோற்றப் பொருத்தமும் முகத்தில் சூழ்ந்திருக்கும் அப்பாவித்தனமும் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு உயிரோட்டம் தந்திருக்கிறது. கிராமத்துக் கிணற்றில் நீச்சலடிப்பது, தன்னைச் சுற்றியிருக்கும் நண்டு சிண்டுகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பது, முதல்முறையாக முறையான நீச்சலுடை அணிகிறபோது கூச்சப்பட்டு நெளிவது, நீச்சல் பயிற்சிக்குப் போகாமல் சாக்குப்போக்கு சொல்லி தப்பிப்பது, சதிகாரர்களின் கடுமையான கொடுமையான பயிற்சிகளால் வேதனைக்கு ஆளாவது, சாதிக்க வேண்டும் என்ற லட்சியவெறி சுமந்து டிரையத்லான்’ போட்டிகளில் பங்கேற்று சோர்ந்து சரிவது, தன்னம்பிக்கையோடு எழுந்து ஓடுவது என கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக பொருத்திக் கொண்டு, உடலை வருத்திக் கொண்டு நடித்திருக்கிறார். ஆர்த்தி நிஜத்திலும் நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த சிங்கப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.சமுத்திரகனி ஒரேயொரு காட்சியில் வந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில் தடைகளைச் தாண்டி சாதித்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி கைதட்டல் பெறுகிறார். மாற்றுத்திறனாளி சாதனைப் பெண்மணி மாதவி லதாவை அறிமுகப்படுத்தி பலருக்குள்ளும் தன்னம்பிக்கை நெருப்பை பற்ற வைத்திருப்பது சிறப்பு.
ஐ ஏ ஏஸ் அதிகாரியாக பிரேம், தன் மகள் நீச்சல் சாதனையில் முதலிடம் பெற வேண்டும் என்பதற்கான அரசியல் செய்யும் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார். மற்றொரு வில்லனாக நம்பியார் மகன் சிறப்பாக நடித்துள்ளார்.
சாவு வீட்டில் குடித்துவிட்டு கலவரம் செய்பவராகவும்முறைமாமனாகவும் சென்ராயன், நன்றாக நடித்துள்ளார். ஊர்ப் பேச்சைக் கேட்டுகொண்டு மகளது நீச்சலுடையை எரிக்கிற ஏ.வெங்கடேஷ் என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
டிரம்ஸ் சிவமணியின் வாரிசான குமரேசன் சிவமணியின் இசையில் பாடல்கள் கதையோட்டத்துக்கு உதவுவதோடு பின்னணி இசை காட்சிகளின் தேவையை பூர்த்தி செய்திருக்கிறது.
NK ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
திறமையாளர்களின் வளர்ச்சியைத் தடுக்கிற சுயநலவாதிகளை, செல்வாக்கு மிக்கவர்களை எதிர்த்துப் போராடுகிற எளியவர்கள்’ கதையை உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருப்பதோடு
படம் நெடுக நீள்கிற நீச்சல் போட்டிகளில், நிறைவுக் காட்சியின் டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்றிருப்பவர்கள் அந்தந்த துறைகளில் நிஜத்தில் சாதித்தவர்கள், சாதித்துக் கொண்டிருப்பவர்கள் என எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார்பாராட்டுக்கள்,