நீலம் புரொடெக்ஷன்ஸ் Presents R. கணேஷ் மூர்த்தி G. சௌந்தர்யா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரிதிவி, பகவதி பெருமாள் லிசி ஆண்டனி, குமரவேல் பக்ஸ், திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் புளுஸ்டார்
கதை
ஊர் தெரு மற்றும் காலணித் தெரு மக்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகளை பேசும் படம்தான் கதை.
90களின் இறுதியில், அரக்கோணம் அருகிலுள்ள பெரும்பச்சை கிராமத்தில் பட்டியலின மக்களின் குடியிருப்பு சார்பாக ரஞ்சித் (அசோக் செல்வன்) தலைமையிலான ‘ப்ளூ ஸ்டார்’ அணியும், அக்கிராமத்தின் ஏனைய மக்களின் சார்பாக ராஜேஷ் (ஷாந்தனு பாக்யராஜ்) தலைமையிலான ‘ஊர் அணி’ ஆன ‘ஆல்ஃபா பாய்ஸ்’ அணியும் யார் பலமானவர்கள் என மைதானத்திலும் பொது இடங்களிலும் அடிக்கடி முட்டிக்கொள்கிறார்கள்.ஊர் திருவிழா கிரிக்கெட் போட்டியில் ஷாந்தனு அணிஜெயிக்கிறது.
அதன்பிறகு ஊர் தெரு மற்றும் காலணி தெரு சமரசமாகி இணைந்து கிரிக்கெட்போட்டியில் கலந்து கொள்கின்றனர் அதில் ஜெயித்தார்களா?இல்லையா? என்பதும் மீதிக்கதை.
காதல், ஆக்ரோஷம், குற்றவுணர்வு என நகரும் ஒரு கல்லூரி இளைஞனின் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை, கதாபாத்திரத்தின் தன்மையையறிந்து நேர்த்தியாக வழங்கியுள்ளார் அசோக் செல்வன். விளையாட்டு வீரராகவும் தேர்ந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். கதாநாயகனுக்கு இணையாக ஷாந்தனு பாக்யராஜும், தன் கதாபாத்திரத்தின் பொறுப்பை அறிந்து, அதற்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன்
காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது. கீர்த்தி பாண்டியன் சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தில் 10 நிமிடங்களுக்கும் குறைவாக வரும் ”புல்லட் பாபு” கதாப்பாத்திரம் கைத்தட்டல்களை பெறுகின்றது. திரைக்கதைக்கு ஏற்ற வசனங்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றது. அசோக் செல்வன் அம்மாவாக நடித்துள்ள லிசி ஆண்டனியின் காட்சிகளுக்கும் தம்பியாக நடித்துள்ள பிரித்விராஜன் இடையே நடக்கும் சின்னச்சின்ன சண்டைக் காட்சிகளுக்கும் நல்ல வரவேற்பு.
பக்ஸ், குமரவேல், அருண்பாலாஜி, திவ்யா துரைசாமி என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
பின்னணி இசையில் கோவிந்த் வசந்தா படத்தின் தரத்தை உயர்த்தியிதிருக்கிறார். பாடல்களும் அருமை.
தமிழ் அ அழகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
சிறப்பான திரைக்கதையால் எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக வெற்றி படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஜெயக்குமார். பாராட்டுக்கள்.