‘அர்ஜுன் சக்ரவர்த்தி – ஜர்னி ஆஃப் அன் சங் சாம்பியன்’ திரைப்படத்தின் சுவாரசியமான முதல் பார்வை வெளியீடு!

CHENNAI:

விஜய ராமராஜு மற்றும் சிஜா ரோஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ் மற்றும் துர்கேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ திரைப்படம் 1980களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை திரையில் காட்டும் படமாக இது அமையும்.

இன்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கில் அர்ஜுன் சக்ரவர்த்தி ஸ்டேடியத்தின் நடுவில் கையில் பதக்கத்துடனும் முகத்தில் பெருமிதத்துடனும் இருப்பதைக் காணலாம். இந்திய கபடியில் அர்ஜுன் சக்ரவர்த்தியின் தாக்கம் 1980களில் இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவின் தாக்கத்திற்கு இணையாக உள்ளது என்ற வாசகம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. விஜய ராமராஜு இந்த பாத்திரத்திற்காக தன்னுடைய உடலை சிறப்பாக கட்டமைத்துள்ளார்.

சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். விக்னேஷ் பாஸ்கரன் இசையமைக்க, ஜெகதீஷ் சீக்கட்டி ஒளிப்பதிவு செய்ய, சுமித் படேல் கலை இயக்கத்தை கவனிக்க பிரதீப் நந்தன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது.

‘அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்’ குறித்து பேசிய தயாரிப்பாளர் ஸ்ரீனி குப்பலா, “இது ஒரு திரைப்படமாக  மட்டுமில்லாமல், சவால்களை தாண்டி நம் அனைவரையும் ஊக்குவிக்கும் மனிதர்களின் அசைக்க முடியாத மன உறுதிக்கான எடுத்துக்காட்டாக அமையும். கனவை நனவாக்க முழு மூச்சாக உழைத்தால் இலக்கை எட்டிவிடலாம் என்பதை இப்படம் வெளிப்படுத்தும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு குழுவாக இணைந்து நாங்கள் உருவாக்கியுள்ள இப்படம் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக அயராது பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கையை இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதால், இந்த பயணத்தில் எங்களுடன் சேர அனைவரையும் அழைக்கிறோம். இது சொல்லப்பட வேண்டிய கதையாகும்,” என்று தெரிவித்தார்.

இயக்குநர் விக்ராந்த் ருத்ரா கூறுகையில், “‘அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் அன்சாங் சாம்பியன்’ படத்தை இயக்கியது பெருமையாக உள்ளது. அர்ஜுன் சக்கரவர்த்தியின் கதையை திரையில் உயிர்ப்பிக்கும் பயணம் சவாலாக இருந்தது. அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றிலிருந்து வெற்றி பிறக்கிறது என்ற பழமொழிக்கு அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கை ஒரு சான்றாகும். எங்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி,” என்றார்.

“அர்ஜுன் சக்ரவர்த்தியாக விஜய் ராமராஜூவின் உழைப்பு உண்மையிலேயே அசாதாரணமானது. அர்ஜுன் சக்ரவர்த்தியின் பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் எட்டு விரிவான உடல் மாற்றங்களுக்கு தன்னை அவர் உட்படுத்திக் கொண்டார். அவரது நடிப்பால் பார்வையாளர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மன உறுதி, உழைப்பு மற்றும் ஒருவரின் கனவுகளின் அசைக்க முடியாத நாட்டம் ஆகியவற்றின் கதை இது. இந்த சினிமா பயணத்தின் ஒரு அங்கமாக இருந்து எங்களை ஆதரிக்குமாறு ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று இயக்குநர் விக்ராந்த் ருத்ரா கூறினார்.

*

Arjun Chakravarthy - Journey of an Unsung Champion intriguing first look out now NEWSFeatured
Comments (0)
Add Comment