நடிகர் முகேன் இரண்டாவது முறையாக இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

சென்னை:

மணிக்கண்ணனின் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர் கவின் மற்றும் நடிகர் முகேன் இரண்டாவது முறையாக இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

G. மணிக்கண்ணன் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கவின் மீண்டும் நடிகர் முகேனுடன் புதிய படம் ஒன்றிற்காக இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில் துவங்கியது.

தயாரிப்பாளர் G. மணிக்கண்ணனின் இரண்டாவது தயாரிப்பான  இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் ‘கோல்டன் ரெட்ரீவர்’ வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில்  நடைபெறவுள்ளது. க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தை ‘பார்க்கிங்’ திரைப்பட கேமராமேன் ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். ‘டாடா’ புகழ் ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். அடுத்த வாரத்தில் தொடங்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்படிப்பை, ஒரே கட்டமாக தொடங்கி நிறைவு செய்ய திரைப்படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

Director Kavin & Actor Mugen Project" NEWSFeatured
Comments (0)
Add Comment