ஆறுபடை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை மையம் கொண்டு பிரமாண்ட ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’

சென்னை:

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆறுபடை புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘புரொடக்ஷன் நம்பர் 1’. ’இந்த படத்தை அறிமுக இயக்குனர் சங்கர் சாரதி என்பவர் இயக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குநர்கள் சிலரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆஷ்னா ஜவேரி நடிக்க, முக்கிய வேடங்களில் பிரேம், மனோபாலா, சாய்தீனா, ராஜசிம்மன், கராத்தே ராஜா, ராமச்சந்திரன், மீசை ராஜேந்திரன், தீபா, சிங்கம் ஜெயவேல் விஜய் டிவி புகழ் சில்மிசம் சிவா கிரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் ஷைலு ராஜேந்தின் என்பவர் இப்படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகி உள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்று முடிந்த கையோடு உடனடியாக படப்பிடிப்பும் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வடசென்னையை மையமாகக் கொண்டு ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூர், ராயபுரம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் நடைபெற்றுள்ளது. இது தவிர சிக்மங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இதன் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

பாவ கதைகள், அசுரன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய சுரேஷ் பாலா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனிக்க, எஃப்ஐஆர் படத்திற்கு இசையமைத்த அஸ்வத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் கதாநாயகன் சேத்தன் சீனு தற்போது தெலுங்கில் பிஸியான கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த ‘‘புரொடக்ஷன் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார்.. இதுதவிர பிரம்மாண்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தற்போது தயாரிக்கும் ஜென்டில்மேன்-2 படத்திலும் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன.

இந்த ‘புரொடக்ஷன் நம்பர் 1’ படம் குறித்து தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது,

“காலம் காலமாக தொடர்ந்து வருகின்ற, இன்னும் தீர்வு கிடைக்காத பற்றி  எரியும் முக்கியமான ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு வடசென்னை பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரில்லர் படமாக இதை இயக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் சங்கர் சாரதி. எப்படி இயக்குநர் ஷங்கருக்கு ஜென்டில்மேன் திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்ததோ, அதேபோல இந்த சங்கருக்கு ‘புரொடக்ஷன் நம்பர் 1’ ஒரு வெற்றி படமாக அமையும். அந்த அளவிற்கு எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் படத்தை பிரமாண்டமாக இயக்கி வருகிறார் சங்கர் சாரதி” என்று கூறியுள்ளனர்.

 

Aarupadai Productions Produced "PRODUCTION NO 1" NewsFeatured
Comments (0)
Add Comment