வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனியின் இயக்கத்தில் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு, அக்டோபர் 21ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு ‘NBK 107’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஆர் எஃப் சியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசருக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் தலைப்பு அக்டோபர் 21ஆம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் துனியா விஜய், நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலகிருஷ்ணா மற்றும் கோபிசந்த் மலினேனி ஆகிய இருவரின் படத்திலும் சூப்பர் ஹிட்டான பாடல்களை வழங்கிய இசையமைப்பாளர் எஸ். தமன், இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளரான நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். அனல் தெறிக்கும் சண்டைக் காட்சிகளை ராம் – லக்ஷ்மன் அமைக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக ஏ எஸ் பிரகாசும், நிர்வாக தயாரிப்பாளராக சந்து ரவிபதியும் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தின் தலைப்பு குறித்து இணையத்தளங்களில் சில தலைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் படக்குழுவினர் உறுதி செய்த தலைப்பு இன்னும் ஐந்து நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்பதால், பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் அசலான டைட்டிலுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
நடிகர்கள்:
நந்தமூரி பாலகிருஷ்ணா,
ஸ்ருதிஹாசன்,
துனியா விஜய்,
வரலட்சுமி சரத்குமார்,
சந்திரிகா ரவி மற்றும் பலர்.
தொழில்நுட்ப குழுவினரின் பட்டியல்:
கதை, திரைக்கதை, இயக்கம் : கோபி சந்த் மலினேனி
தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி & ஒய். ரவிசங்கர்
தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
இசையமைப்பாளர் : எஸ். தமன்
ஒளிப்பதிவு: ரிஷி பஞ்சாபி
படத்தொகுப்பு : நவீன் நூலி
தயாரிப்பு வடிவமைப்பு : ஏ. எஸ். பிரகாஷ்
வசனம் சாய் மாதவ் புர்ரா
சண்டைக் காட்சி : ராம் – லக்ஷ்மன்
நிர்வாகத் தயாரிப்பு : சந்து ரதிபதி
மக்கள் தொடர்பு : யுவராஜ்