மர்மங்கள் திகில் நிறைந்த கிராமத்தில் சிறிய வயது பிள்ளைகள் கடத்தப்பட்டு தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கான விளக்கம் தெரியாமல் புரியாத புதிராக இருக்கும் அந்த மர்ம கிராமத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார் கிச்சா சுதீப்.
அந்த கிராமத்தில் நடக்கும் கொலைகளை கிச்சா சுதீப் விசாரிக்கும்போது அதிர்ச்சியடையும் தகவல்கள் கிடைக்கிறது.
இடையில் கிச்சா சுதீப்பை கொல்வதற்கான சூழ்ச்சியும் அரங்கேற …. இறுதியில் எதற்காக இந்த கொலைகள் நடக்கிறது ? கொலைகள் செய்த மர்ம மனிதர்களை கிச்சா சுதீப் கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்ற கேள்விக்கு விடை சொல்லும் படம்தான் ’விக்ராந்த் ரோணா’
நாயகனாக கிச்சா சுதீப் போலீஸ் இன்ஸ்பெக்டராக கொலைகளை பற்றி விசாரிக்கும்போது ஸ்டைலான ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான ரசிக்கும்படியான நடிப்பில் அசத்துகிறார் .
அஜனிஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்! குறிப்பாக ரசிகர்களை எழுந்து ஆட வைக்கும் பாடல் ‘ராரா ராக்கம்மா’,,,,,,, பின்னணி இசை மிரட்டல் !
இளைஞர்களை கவரும் மற்றொரு நாயகனாக நிரூப் பண்டாரி, நாயகியாக நீதா அசோக்,ஒரு பாடலுக்கு இளமை துள்ளலுடன் நடனம் ஆடியிருக்கும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், இயக்குநர் பிரியா, மதுசூதனராவ் , ரவிசங்கர் கௌடா,,,,,,,, என கதைக்கேற்றபடி அனைவரது நடிப்பும் சிறப்பு !
3D தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வில்லியம் டேவிட்டின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !
3D தொழில் நுட்பத்தில் மர்மம் நிறைந்த பான் இந்தியா படமாக,,,,,தொடக்கத்தில் திகிலாக ஆரம்பிக்கும் கதையில்
அடுத்தடுத்து வரும் திரைக்கதையின் வேக குறைவினால் நகரும் காட்சிகள் , இருட்டிலேயே படமாக்கப்பட்ட பல காட்சிகள் என படத்தில் சில குறைகள் இருந்தாலும்,,,,இறுதியில் கொலையாளிகள் யார் என கிச்சா சுதீப் கண்டுபிடித்ததும் வேகமெடுக்கும் திரைக்கதையுடன் அதிர்ச்சி தரும் திருப்பு முனையாக கிளைமாக்ஸ் ஆக்க்ஷன் சண்டை காட்சிகளை அனைவரும் ரசிக்கும்படி படமாக்கியுள்ளார் இயக்குனர் அனுப் பண்டாரி
ரேட்டிங் 3 . / 5