Madhagajaraja Movie Review

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சோனுசூட்,சந்தானம், மனோபாலா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மதகஜராஜா

கதை

கேபிள் டிவி நடத்தும் மத கஜ ராஜா (எம்ஜிஆர்) விஷால். இவரது நண்பர்களான நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் இருவரும் கற்குன்றன் விஸ்வநாத்தால் (சோனு சூட்) பாதிக்கப்படுகின்றனர். அரசியல் பலம், பணபலம் நிறைந்த வில்லனாக வரும் சோனு சூட்டை எதிர்த்து, சண்டையிடும் சாதாரண கேபிள் டிவி ஆபரேட்டரான விஷால் தனது நண்பர்கள் இழந்த பணத்தை மீட்டாரா? தனது சவாலில் ஜெயித்தாரா? என்பதே கதை.

விஷால் நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும், நடத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு பாடலும் அசத்தலாக பாடியுள்ளார். கதாநாயகிகளாகவரலட்சுமி,  அஞ்சலி கவர்ச்சியிலும் நடிப்பிலும் அசத்தியுள்ளனர்.சந்தானம், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் காமெடிரசிகர்களை சிரிக்கவைக்கிறது.வில்லனாக சோனுசூட் நடிப்பில் மிரட்டியுள்ளார்.லொல்லு சபா மனோகர் மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியில் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரியபலம். ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

காமெடியுடன் வழக்கமான பாணியில் ரொமான்ஸ், ஆக்ஷன் கலந்து எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் சுந்தர் சி. பாராட்டுக்கள்.

#madhagajarajamoviereview
Comments (0)
Add Comment