எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் சாம் சிஎஸ்ஸின் இசையில்
ஷேன் நிகாம், கலைசரன், நிஹரிகா, ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மெட்ராஸ்காரன் கதை
சென்னையில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வசதியான பின் தனது காதலித்த பெண்ணுடன் திருமணத்தை சொந்த ஊரில் ஊர் மெச்சும்படி தடபுடலாக நடத்த வேண்டும் என்று ஷேன் நிகம் (சத்யா) சொந்த ஊரான புதுக்கோட்டையில் ஏற்பாடுகளை செய்கின்றார்.
செலவுக்காக பணம் எடுக்க ஏடிஎம்மிற்கு செல்லும் சத்யாவுக்கும், அங்கு ஒரு ஆளை அடிக்க தயாராக நிற்கும் துரைசிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்லும் சத்யா, மணப்பெண் சத்யாவை உடனே பார்க்க வேண்டும் என்பதால் மணப்பெண் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு காரில் போகும்போது மணப்பெண்ணுடன் போனில் பேசிக்கொண்டேசெல்லும்போது குறுக்கே நாய் வர சத்யா காரை உடனே திருப்ப கர்ப்பிணி பெண் ஐஸ்வர்யா தத்தா மீது மோதி விடுகிறார். இதனால் அவரது உறவினர்கள் ஒன்று கூடி சத்யாவை தாக்க முயல, முதலில் அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று பேசி அழைத்து செல்கிறார் சத்யா.
அங்கு ஐஸ்வர்யா தத்தாவின் சகோதரரான அரசியல்வாதியும், கணவர் துரைசிங்கமும் வந்து சத்யாவை அடிக்கின்றனர் அங்கு சிகிச்சையில் இருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் குழந்தை இறந்து விடுகிறது. இதன் காரணமாக குற்ற உணர்ச்சியில் சத்யா தாமாக சரணடைந்து சிறைக்கு செல்கிறார். இரண்டு வருடம் சிறையில் இருக்கிறார். இரண்டு வருடம் முடிந்து வெளியில் வந்த பின்புதான் அந்த குழந்தை இறப்புக்குத் தான் காரணம் அல்ல என்பது தெரிய வருகிறது. மீண்டும் ஊருக்குச் சென்று உண்மையானகொலைகாரன் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அதைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஹீரோ ஷேன் நிகாம் நடிப்பிலும் சண்டை காட்சிகளிலும் நடனத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.கலையரசனை ஊரில் ஒரு ரவுடி போல காட்டுகிறார்கள். ஆரம்பத்திலேயே பெண் பின்னால் சுற்றும் ஒருவனின் கையை வெட்டுகிறார். அப்படிப்பட்டவர் ஷேன் நிகாம் விபத்து ஏற்படுத்தி தனது வாரிசைக் கொன்றுவிட்டார் என்று தெரிந்த போது கொஞ்சம் கோபப்படுவதுடன் விட்டுவிடுகிறார். இவருடைய கதாபாத்திரத்தில் தெளிவும் இல்லை, கலையரசன் நன்றாக நடித்துள்ளார்ஷேன் நிகாம் காதலியான நிஹரிகா கொனிடலா, கலையரசன் மனைவியான ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.சாம் சிஎஸ்ஸின் பாடல்கள் பிண்ணனி இசை ரசிக்கவைக்கிறது ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் ஊர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் வாலி மோகன்தாஸ் முதல்பாதியை சுவாராஸ்யமாகசொன்னவர் இரண்டாம் பாதியையும் ரசிக்கும்படி சொல்லியிருக்கலாம்