Smile Man Movie Review

 

மேக்னம் மூவிஸ்
தயாரிப்பில் ஷியாம் பிரவீன் இருவர் இயக்கத்தில்
கவாஸ்கர் அவினாஷ் இசையில்
சரத்குமார், ஸ்ரீகுமார், சிஜா ரோஸ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஸ்மைல் மேன்
 
கதை
 
 
சிபிசிஐடி-யில் உயர் அதிகாரியாக இருப்பவர் சரத்குமார். குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் விபத்தில் சிக்கி சில வருடங்கள் ஓய்வில் இருப்பவர். அவருக்கு ஞாபக மறதி நோயான அல்சைமர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ‘ஸ்மைல் மேன்’ சீரியல் கொலைகள் போல தற்போதும் நடக்க ஆரம்பிக்கிறது. புதிதாக வந்த அதிகாரியான ஸ்ரீகுமார் அந்த வழக்கு விசாரணையை நடத்த ஆரம்பிக்கிறார். சரத்குமாரை மீண்டும் பணிக்கு வருமாறு அழைத்து அவரது தலைமையில் ஒரு குழு செயல்பட ஆரம்பிக்கிறது. மீண்டும் நடக்கும் கொலைகளுக்குக் காரணமான அந்த கொலையாளியை அவர்கள் கண்டுபிடிக்கிறார்களா? இல்லையா? கொலைகாரன் யார்? எதற்காக கொலைகளை செய்கிறான் என்பதுதான் படத்தின் மீதிக் கதை
 
சரத்குமாரின் நடிப்பில் வெளிவந்துள்ள 150வது படம். அவருடைய கதாபாத்திரம் அழுத்தமான கதாபாத்திரமாகவே உள்ளது. ஞாபக மறதியில் பாதிக்கப்பட்டு, தனக்கு நெருக்கமானவர்களின் கொலையைத் தடுக்க முடியாத பாதிப்பு என தவிக்கும் ஒரு கதாபாத்திரம். அவருடைய அனுபவ நடிப்பில் அவரது கதாபாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார். வழக்கை விசாரிக்கும் புதிய அதிகாரியாக ஸ்ரீகுமார், அவருடைய உதவியாளர்களாக சிஜா ரோஸ், ராஜ்குமார். காக்கிச்சட்டை அணியாத சிபிசிஐடி அதிகாரிகள். ராஜ்குமார். சரத்குமாருக்கு உதவி செய்யும் குமாஸ்தாவாக ஜார்ஜ மரியான். பிளாஷ்பேக்கில் இனியா, பேபி ஆலியா என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். விக்ரம் மோகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். கவாஸ்கர் அவினாஷ் இசை ரசிக்கவைக்கிறது.
 
இயக்குநர்கள் ஷியாம் பிரவீன் க்ரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவராஸ்யமாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.
#smilemanmoviereview
Comments (0)
Add Comment