சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் ராஜசேகர் என் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கருணாகரன், ஜெயபிரகாஷ், பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மிஸ் யூ ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ், இசை ஜிப்ரான், எடிட்டர் தினேஷ் பொன்ராஜ்
கதை
சித்தார்த் வெளியூர் பயணம் செல்ல ரயில்வே ஸ்டேஷன் செல்கிறார். அங்கு முன்பின் தெரியாத கருணாகரனை சந்திக்கிறார். இருவரும் மனம்விட்டு பேசுகையில் கர்ணாகரனை சித்தார்த்துக்கு பிடித்துவிடுகிறது.. சித்தார்த் டிரெய்னை மிஸ் பண்ணிவிடுகிறார். கருணாகரன் எங்கு செல்லவேண்டும் என சித்தார்த்திடம் கேட்க எங்காவது செல்லவேண்டும் என சொல்ல அதற்கு கருணாகரன் என்னுடன் காரில் வா பெங்களூரில் உள்ள என் வீட்டிற்கு செல்லலாம் என்று அழைக்க கருணாகரனுடன் பேங்களூர் செல்கிறார். பேங்களூரில் ஓரிரு இடங்களில் கதாநாயகி ஆஷிக் ரங்கநாத்தை சந்திக்க அவர் மீது காதல் வருகிறது. காதலை அவரிடமே நேரில் சொல்ல அவர் காதலை மறுக்க அவர் காதலை ஏற்க என்ன செய்யலாம் என்று கருணாகரனிடம் ஆலோசனை கேட்க அம்மா மூலம் பெண் கேட்கலாம் என்று சொல்கிறார். சித்தார்த் அம்மாவிடம் ஆஷிக் ரங்கநாத்தை தான் காதலிப்பதாக சொல்ல அம்மா ஷாக் ஆகிறார். ஏனென்றால் ஆஷிக் ரங்கநாத் சித்தார்த்தின் மனைவி. இதன்பிறகு என்ன நடக்கிறது இதற்கு முன் என்ன நடந்தது? என்பதே சுவாராஸ்யமான மிஸ் யூ படத்தின் கதை.
சித்தார்த் நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நபித்துள்ளார்.கதாநாயகியாக ஆஷிக் ரங்கநாத் சிறப்பாக நடித்துள்ளார். கருணாகரன், பால சரவணன், ஜெயபிரகாஷ் பொன்வண்ணன் அனுபமா மாறன் என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். ஜிப்ரன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. K.G. வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் படத்திற்கு சுவாராஸ்யம் கொடுத்துள்ளது.
இயக்குநர் ராஜசேகர் அழகான காதல்கதையை எடுத்துக்கொண்டு அதற்கு நன்றாக திரைக்கதையமைத்து சந்தோஷமாக சிரித்து எல்லோரும் பேமிலியுடன் பார்க்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.