ஜோஜு ஜார்ஜ், இயக்கத்தில் அபிநயா, சாகர் சூர்யா, வி.பி.ஜுனைஸ், பிரசாந்த் அலெக்சாண்டர், பாபி குரியன், சுஜித் சங்கர், சீமா, அபயா ஹிரண்மயி, சாந்தினி ஸ்ரீதரன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பணி.
கதை
திருச்சூரில் பெயர்பெற்ற ‘மங்கலத்’ குடும்பத்தில் முக்கியமான ஒருவர்தான் கிரி (ஜோஜு ஜார்ஜ்). ரியல் எஸ்டேட் மற்றும் பில்டர்ஸ் தொழிலுடன், மாஃபியா சின்டிகேட் கேங்காவும் அவர் குடும்ப உறுப்பினர்கள் (பிரசாந்த் அலெக்சாண்டர், பாபி குரியன், சுஜித் சங்கர்) செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் கல்லூரி நண்பர்களாக இருந்து குடும்ப உறுப்பினர்களாக மாறியவர்களும் கூட. கிரிக்கு கௌரி(அபிநயா) என்ற அழகான மனைவியும் உண்டு. குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் கிரி.
மெக்கானிக்குகளாக இருக்கும் டான் (சாகர் சூர்யா) சிஜு (வி.பி.ஜுனைஸ்) இருவருக்கும் சீக்கிரமே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு. அதற்காக முதல்முறை கூலிப்படையாக மாறி பட்டப்பகலில் ஜனநடமாட்டம் உள்ள நகரின் மையப்பகுதியில் ஒருவரைத் திட்டமிட்டுக் கொலை செய்கிறார்கள். இதனால் 10 லட்சம் ரூபாய் பணமும் கிடைக்க அந்த வாழ்க்கை அவர்களுக்குப் பிடித்துப்போகிறது. டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் கிரியின் மனைவியிடம் டான் (சாகர் சூர்யா) சிஜு (வி.பி.ஜுனைஸ்) இருவரும் சீண்டலில் ஈடுபட்டு கிரியிடம் செமத்தியாக அடிவாங்குகிறார்கள்.அடிபட்ட அவமானத்தில் கிரி இல்லாத சமயம் பார்த்து அவரது வீட்டிற்கு டான் (சாகர் சூர்யா) சிஜு (வி.பி.ஜுனைஸ்) சென்று அவரது மனைவி அபிநாயாவை கெடுத்து விடுகிறார்கள். இந்த இருவரையும் பழிவாங்க கிரி என்ன திட்டம் தீட்டினார் தவறு செய்த இருவர்கள்
டான் (சாகர் சூர்யா) சிஜு (வி.பி.ஜுனைஸ்)
கிரியிடம் மாட்டிக்கொண்டார்களா? இல்லையா? முடிவு என்ன என்பதே படத்தின் மீதிக்கதை
ஜோஜு ஜார்ஜ். கதையின் நாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். அவரது மனைவியாக அபிநயாவும் சிறப்பாக நடித்துள்ளார்.
வில்லன்களாக சாகரும் ஜூனைஸும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். பிரசாந்த் அலெக்சாண்டர், பாபி குரியன், சுஜித் சங்கர், சீமா, அபயா ஹிரண்மயி, சாந்தினி ஸ்ரீதரன் என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.
விஷ்ணு விஜய்யின் பின்னணி இசையும், சாம்.சி.எஸ், சந்தோஷ் நாராயணன் பாடல்களின் இசையும், படத்திற்கு பெரிய பலம். வேணு மற்றும் ஜிண்டோ ஜார்ஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
நல்ல நடிகனாக இருந்தவர் இயக்குநராக ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு மிரட்டலான பழிவாங்கல் கதையை விறுவிறுப்பாகத் தந்து வெற்றிப்பட இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். பாராட்டுக்கள்.