#nirangal Moondru Movie Review

ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பில்  கருணாகரன்  தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில்
அதர்வாவுடன் சரத்குமார், ரஹ்மான், துஷ்யந்த், அம்மு அபிராமி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் நிறங்கள் மூன்று.
கதை
கதை மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி வருகிறது – ஒரு ஆர்வமுள்ள இயக்குனர் (அதர்வா முரளி), ஒரு ஊழல் மற்றும் வக்கிரமான போலீஸ் (சரத் குமார்) மற்றும் ஒரு ஆசிரியர் (ரஹ்மான்), ஒரு நல்ல மகளின் தந்தை
சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஏகப்பட்ட  நிறுவனங்களின் படியில் ஏறி இறங்குகிறார் நாயகன் அதர்வா ஒரு ஸ்கூல் டீச்சரான ரகுமான் தன் மகள் அம்மு அபிராமியை காணவில்லை என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமாரிடம் புகார் தருகிறார் இச்சூழலில் அம்மு அபிராமியை லவ் செய்யும் துஷ்யந்த் காணாமல் போன அம்மு அபிராமியை தேடி அலைகிறார். இந்த மூன்று சம்பவங்களும் வெவ்வேறு பாதையை போனாலும் இறுதியில் ஒரு
நேர்க்கோட்டில் வந்து இணைகிறது.
அதை சுவாராஸ்யமாக சொல்லியிருப்பதே நிறங்கள் மூன்று  படத்தின் கதை
அதர்வா சிறப்பாக நடித்துள்ளார்.  ரஹ்மான்  ஆசிரியராக நன்றாக நடித்துள்ளார். சரத்குமாரின் நடிப்பு மிரட்டல். . துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் அம்மு அபிராமியும் நன்றாக நடித்து இருக்கிறார்கள்
ஜேக்ஸ் பிஜாய் இசை ரசிக்கவைக்கிறது.ஒளிப்பதிவாளர் தீஜோ டோமி ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
நிறங்கள் முன்று ஒரு சிறந்த த்ரில்லர் கதையாக எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன். பாராட்டுக்கள்
#nirangalmoondrumoviereview
Comments (0)
Add Comment