*ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், “காந்தாரா: அத்தியாயம் 1” அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது.*

*ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், “காந்தாரா: அத்தியாயம் 1” அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது.*
 
சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட மொழிப் படங்களில் ஒன்றான “காந்தாரா: அத்தியாயம் 1”, அக்டோபர் 2, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து அடுத்த பான்-இந்திய பிரம்மாண்ட படமாக, மீண்டும் ஒருமுறை உலகமெங்குமுள்ள பார்வையாளர்களைக் கவர தயாராக உள்ளது இப்படம்.
 
பிரம்மாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், மீண்டுமொருமுறை தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது. படக்குழு குந்தாப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடம்பப் பேரரசை மீண்டும் உருவாக்கி, பார்வையாளர்களை வீரம், கலாச்சாரம் மற்றும் மர்மம் நிறைந்த சகாப்தத்தில் மூழ்கடிக்கவுள்ளனர். இந்தத் திரைப்படம் காந்தாரா உலகின் கடந்த காலத்திற்கு பார்வையாளர்களை கூட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த அற்புதமான படைப்பினை இயக்கி நடித்திருக்கும், ரிஷப் ஷெட்டி இப்படத்திற்காக முழு உழைப்பையும் கொட்டியிருக்கிறார். ரிஷப் தனது கதாபாத்திரத்தை உண்மையாக சித்தரிக்க, கேரளாவில் இருந்து தோன்றிய பழமையான தற்காப்பு கலை வடிவங்களில் ஒன்றான களரிபயட்டில் கடுமையான பயிற்சி பெற்றார். கலையில் தேர்ச்சி பெறுவதற்கான அவரது அர்ப்பணிப்பு அவரது நடிப்புக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் சேர்த்து, அவரது பாத்திரத்தை பாரம்பரியமிக்கதாகவும், உண்மையானதாகவும் ஆக்கியுள்ளது.
 
கொங்கன் நாட்டுப்புற வாழ்வியலின் செழுமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது காந்தாரா: பாகம் 1. அதன் கவர்ச்சியான கதை, மூர்ச்சடைய வைக்கும் காட்சிகள் மற்றும் இதயப்பூர்வமான நடிப்பால், படம் இந்திய எல்லைகளுக்கு அப்பால் பார்வையாளர்களை கவரந்தது. உள்ளூர் மரபுகளை மிக அழுத்தமான கதைசொல்லலில் உண்மையாக சித்தரித்த இப்படம், உலகளாவிய ரசிகர்களை ஈர்த்து, ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகியது.
 
காந்தாரா: அத்தியாயம் 1 படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட உருவாக்கம், ரிஷாப் ஷெட்டியின் அர்ப்பணிப்பு மற்றும் முதல் அத்தியாயத்தின் மீதான ஈர்ப்புடன், இந்தப் படம் திரையுலகில் இன்னொரு மைல்கல்லாக மாற உள்ளது.
#kantharamovie
Comments (0)
Add Comment