Bloody Beggar Movie Review

நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில்
கவின் அனார்கலி நாசர், ரெடின் கிங்ஸ்லி, மெர்லின் பிலிப், சுனில் சுகதா திவ்யா விக்ரம் மற்றும் பலர் நடித்து தீபாவளிக்கு வெளியாகியிருக்கும் படம் ப்ளடி பெக்கர்

கதை

தந்தையின் சொத்துக்காக வாரிசுகள் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இடையில் பிச்சைக்காரன் ஒருவன் வந்து சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் ‘ப்ளடி பெக்கர்’.

கவின் மாற்றுத்திறனாளி, கண் பார்வையற்றவர் என ஒவ்வொரு நாளும் ஒரு வேஷம் போட்டு பிச்சையெடுக்கிறார்.
ஆனால் ஜேக் என்ற சிறுவன் உழைத்து வாழ வேண்டும் என, பள்ளிக்கு சென்றுகொண்டே இடையில் புத்தகம், பேனா என விற்று கவினுடன் சேர்ந்து வசிக்கிறார்.
இந்த சூழ்நிலையில்
அன்னதானம் போடுவதாக கூறி, பெரிய அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கவின். கவின் கரி சாப்பாடு பிச்சைக்காரர்களுடன் சாப்பிடும்போது எதிரே உள்ள பணக்கார அரண்மனையில் ஆள் இல்லை என்று உள்ளே சென்று மாட்டிக்கொள்கிறார். ஆள் இல்லை என்ற மாளிகையில் உயிருடன் சிலரும் ஒரு பேயும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் உள்ளே சென்ற கவினுக்கு ஆபத்தும் சூழ்ந்து கொள்கிறது. அது என்ன ஆபத்து? அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதே படத்தின் மீதிக்கதை

கவின் மற்றும் ரோஹித் டென்னிஸ் (ஜாக்) இடையேயான வேதியியல் கிட்டத்தட்ட கச்சிதமாக உள்ளது – கவின் நடிப்பு இயற்கைக்கு
மாறானதாகவும், சில நேரங்களில் மிகைப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்தாலும். இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையேயான நகைச்சுவையான கேலி அதை ஈடுசெய்கிறது, இருவரின் நடிப்பும் அருமை.
கவின் – ரெடின் காம்போ டார்க் காமெடி களத்துக்கு உதவுகிறது.
மலையாள நடிகர் சுனில் சுகதா சைலண்ட் வில்லானாக மிரட்டுகிறார். அதேபோல் தெலுங்கு நடிகர் ப்ருத்வி ராஜ் காமெடியில் கலக்குகிறார். ஆனாலும் அர்ஷத்தின் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள்தான் காமெடியின் உச்சம்.
ராதாரவி
அனார்கலி நாசர், மெர்லின் பிலிப், திவ்யா விக்ரம் என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

ஜென் மார்டின். இசை படத்தை ரசிக்கவைக்கிறது.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்

பொழுதுபோக்குப் படமாகவே இதைப் படைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பாராட்டுக்கள்.

#bloodybeggarmoviereview
Comments (0)
Add Comment