’சபரி’ திரைப்பட விமர்சனம்.
தயாரிப்பாளர்கள்
மகேந்திராநாத் கொண்டலா தயாரிப்பில் இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில்
இசையமைப்பாளர். கோபி சுந்தர் இசையில்
வரலட்சுமி
சரத்குமார் .மைம்கோபி.
கணேஷ்வெங்கட்ராமன்.நிவேக்ஷா ஷிண்டம் ஷெட்டி . ஆகியோர் நடித்து வெளியாகியிருக்கும் படம் சபரி
கதை
கணவரை விட்டு பிரிந்து தனது பெண் குழந்தையுடன் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு வேலை தேடி வரும் வரலட்சுமி சரத்குமார், தனது மகள் தான் உலம் என்று வாழ்கிறார். அதே சமயம், அவரிடம் இருந்து குழந்தையை பிரிக்க அவரது ம
கணவர் கணேஷ் வெங்கட்ராமன் முயற்சிக்கிறார்.
இதற்கிடையே, கொலை குற்றவாளியான மைம் கோபி, வரலட்சுமியின் மகள் தன்னுடைய
குழந்தை என்று சொந்தம் கொண்டாடுகிறார். தன்குழந்தையைவரலட்சுமியிடமிருந்து மீட்க போராடுகிறார்
மைம் கோபியிடமிருந்து தனது மகளை மீட்க போராடும் வரலட்சுமி சரத்குமார் எடுத்த அதிரடி நடவடிக்கை ந
என்ன? அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்கும் என்பதை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார்,
பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் விதத்தில் சிறப்பாக
நடித்திருக்கிறார். தன் குழந்தையை பின் தொடரும் ஆபத்தில் இருந்து அவரை காப்பாற்ற போராடும்
வரலட்சுமி, நடிப்பு மற்றும் ஆக்ஷன் என அசத்தியிருக்கிறார். ஆரம்பத்திலேயே கவனம் ஈர்க்கும் வகையில் அறிமுகமாகும்
மைக் கோபியின் கதாபாத்திரம் எதிர்பார்ப்பு மிக்கதாக
பயணிக்கிறது. மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வந்த அவரது நடவடிக்கைகள் மிரட்டலாக இருக்கிறது.
வரலட்சுமியின் கணவராக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன்,
ஷசாங் இருவரும் கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.
வரலட்சுமியின் மகளாக நடித்திருக்கும் பேபி நிவேக்ஷாவின் நடிப்பும் சிறப்பு.
ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.
தன் மகள் தான் உலகம் என்று வாழும் நாயகியின் பாசப் போராட்டத்தை, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்லியிருக்கும் இயக்குநர் அனில் கட்ஸ், ஆரம்பக் காட்சியிலேயே பார்வையாளர்களை கதைக்குள் அழைத்துச் சென்று இறுதிவரை எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார்பாராட்டுக்கள்.